செய்திகள்

மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் ஏழை மாணவர்களுக்கு கல்வி பயில நிதி உதவி : நன்கொடைகள் வரவேற்கப்படுகிறது.

மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனம் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் மயிலாப்பூரில் உள்ள பத்து, பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் ஏழை மாணவர்கள் கல்வி பயில நிதி உதவி அளித்து உதவி வருகிறது.

இந்த வருடம் கொரோனா காரணமாக நிதி உதவி அளிக்கும் திட்டத்தை தாமதமாக தொடங்கி உள்ளது. மயிலாப்பூரிலுள்ள வெவ்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் உதவி தொகை பெற விண்ணப்பித்துள்ளனர். இதுவரை சில்ட்ரன்ஸ் கார்டன் மற்றும் இராணி மெய்யம்மை பள்ளிகளை சேர்ந்த பன்னிரெண்டு மாணவர்களுக்கு எழுபத்தி ஏழாயிரம் ரூபாய் கல்வி உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் நான்கு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் விண்ணப்பித்து காத்துக்கொண்டுள்ளனர்.

நீங்கள் மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனத்திற்கு நிதிஉதவி அளிக்க விரும்பினால் பொதுமக்கள் மயிலாப்பூர் டைம்ஸ் அலுவலக மேனேஜர் சாந்தியை 2498 2244 / 24671122 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும். நீங்கள் அளிக்கும் நிதிஉதவிக்கு வரிவிலக்கு உண்டு. ரசீது வழங்கப்படும். நீங்கள் நேரிடையாக ஆன்லைன் வழியாகவும் பணத்தை செலுத்தலாம். இந்த உதவி தொகை பொதுமக்கள் வழங்கும் நிதியிலிருந்தும் மற்றும் மயிலாப்பூர் டைம்ஸ் தொண்டு நிறுவனத்தின் நிதியிலிருந்தும் வழங்கப்படுகிறது.

admin

Recent Posts

ஆர்.ஏ.புரம் சமூக திட்டத்தில் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்கள் 12ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்போர் சங்கம் (RAPRA) சென்னை (ஜிசிசி) மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் வசதி குறைந்த…

25 mins ago

ஆர் கே மட சாலையில் இருந்த தற்காலிக பேருந்து நிறுத்தம் இடமாற்றம்.

ஆர் கே மட சாலையில் அண்ணா விலாஸ் உணவகம் அருகே செயல்பட்டு வந்த தற்காலிக எம்டிசி பேருந்து நிறுத்தம் மாற்றப்பட்டுள்ளது.…

1 hour ago

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

1 day ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

1 day ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

2 days ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

3 days ago