தீயணைப்புத் துறையினரின் மழைக்கால ஆயத்தப் பயிற்சி மற்றும் டெமோ ஒரு பெரிய விழா போன்றிருந்தது.
செவ்வாய்க் கிழமை காலை, இதமான காலநிலையில், மயிலாப்பூர் பெண்கள் பள்ளி மாணவிகள் குழு ஒன்று ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் குளத்தின் படியில் அமர்ந்திருந்தது, அவர்களுக்கும் சில உறுப்பினர்களுக்கும் தமிழ்நாடு தீயணைப்புப் படை வீரர்கள் மாறி மாறி மழைக்கால ஆயத்தப் பயிற்சி காட்டுவதைக் கண்டு, பார்த்து ஆரவாரம் செய்தனர். இது பொதுமக்கள், மழைக்காலத்தில் SOS அழைப்புகளைச் சமாளிக்கும் வழிகள்.
இடுப்பளவு தண்ணீரில் இருக்கும் மக்களைக் கண்டுபிடித்து, தூக்கிச் சென்று, பாதுகாப்பாக அழைத்து செல்ல, தண்ணீரில் நிற்கும் கட்டிடங்களின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களில் சிக்கியவர்களைக் காப்பாற்ற, பாதுகாப்பாக அழைத்து செல்ல, வயதானவர்களைக் காப்பாற்ற. இந்த பயிற்சிகள் செய்து காண்பிக்கப்பட்டன.
இந்த நிகழ்நேர டெமோக்கள் அனைத்தும் கோயில் குளத்தில் உள்ள நீரில் நடத்தப்பட்டன.
இந்த குளத்தின் நடுவில் இருக்கும் மண்டபத்தைச் சுற்றி, படகுகள் தண்ணீரின் குறுக்கே பாய்ந்து சென்ற போது, மாணவர்கள் கூத்து நிகழ்ச்சியை ரசிப்பது போல் ஆரவாரம் செய்தனர்.
பருவமழையின் போது ஏற்படும் அவசரநிலைகளை சமாளிக்க தயாராக உள்ளதாகவும் தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீபாவளிக்கு பொருட்களை விற்கும் கடைக்காரர்கள் மற்றும் பஸ் பயணிகள் குளத்தின் ஓரமாக நடைபாதையில் நடந்துசெல்பவர்கள், இந்த நிகழ்வைப் பற்றி ஆர்வமாக இருந்தவர்கள், கோவிலின் காணாமல் போன மயில் சிலையை போலீசார் மீண்டும் தேடுகிறார்கள் என்று கருதினர், இந்த மயில்சிலை வழக்கு நீண்ட காலமாக நீதிமன்றத்தில் இழுபறியாக உள்ளது.
<< உங்கள் தெரு/காலனி பருவமழையைக் கையாளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா? உங்கள் பகுதியின் நிலைமையைப் எங்களுக்கு தெரிவிக்கலாம்; mytimesedit@gmail.com>>
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…