செய்திகள்

ஊரடங்கு நேரத்தில், இந்த தொழிலாளர்கள் மந்தைவெளியில் காய்கறி கழிவுகளை எருவாக மாற்றுகிறார்கள்.

ஊரடங்கின் ஒரு வெள்ளிக்கிழமை மதியம். ஆனால் மந்தைவெளியில் எம்.ஆர்.டி.எஸ் ரயில் நிலையம் அருகே உள்ள கொட்டகையின் கீழ் பணிபுரியும் இந்த நான்கு பேருக்கும் இது பொருந்தாது. இந்த வேலையை அவர்கள் குறிப்பிட நேரத்திற்கு செய்ய வேண்டும்.

காய்கறி கழிவுகளை எருவாக மாற்றும் பணியில் இந்த நான்கு பேரும் இருக்கிறார்கள்.

இது நகராட்சி அமைப்பின் ஒரு சிறிய திட்டம். இந்த மண்டலத்தின் உர்பேசர் சுமித் ஊழியர்கள் இந்த பகுதியில் சேகரிக்கப்பட்ட காய்கறி கழிவுகளையும், பிளாஸ்டிக்கையும் இந்த கொட்டகையின் ஒரு மூலையில் கொட்டுகிறார்கள்.

நான்கு பேரும் பொருட்களைப் வேலையை பிரித்து செய்கிறார்கள் – இரண்டு பெண்கள் அழுகும் தக்காளி, காலிஃபிளவர் இலைகள் மற்றும் கீரைகளை பிரித்து சிறிய துண்டுகளாக நறுக்குகிறார்கள்.

மற்றொருவர் அதை சிமென்ட் தொட்டிகளில் கொட்டுகிறார். இந்த காய்கறி கழிவுகள் அழுகி உரமாக மாற 45 நாட்களுக்கு மேல் தேவைப்படுகிறது. உண்மையான எருவாக மாற மேலும் 10 நாட்கள் தேவைப்படலாம்.

தயார் செய்யப்பட்ட உரம் இங்கு கிலோ ரூ.20க்கு விற்கப்படுகிறது.

admin

Recent Posts

கோடை காலத்திற்காக சித்திரகுளத்தில் தற்காலிக குடிநீர் பந்தலை எம்எல்ஏ திறந்து வைத்தார்

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு கடந்த வார இறுதியில் மயிலாப்பூர் சித்திரகுளம் அருகே பொதுமக்களுக்காக குடிநீர் பந்தலை திறந்து வைத்தார். தேவைப்படுபவர்களுக்கு…

22 hours ago

பேருந்து நிறுத்தங்களில் தங்குமிடங்களுக்கான பயணிகளின் வேண்டுகோளுக்கு சென்னை மெட்ரோ இறுதியாக பதிலளித்துள்ளது.

கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு மெட்ரோ ரயில் பாதை பணியின் காரணமாக பேருந்துகள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டது. எம்டிசி பேருந்து நிறுத்தங்களில்…

23 hours ago

மெரினா லூப் சாலையில் சாலை மறியல்; மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்

பட்டினப்பாக்கத்தில் உள்ள மெரினா லூப் சாலை மற்றும் டாக்டர் டி.ஜி.எஸ்.தினகரன் சாலை சந்திப்பில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் சம்பவம் நடந்தது,…

2 days ago

இளைஞர்களுக்கான புகைப்பட பயிற்சி முகாம் இன்று தொடங்குகிறது. இதை மயிலாப்பூர் எம்எல்ஏ துவக்கி வைக்கிறார்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு, ஆண்டுதோறும் நடத்துவது போல், இன்று, மே 4 முதல், இளைஞர்களுக்கான ‘புகைப்பட பயிற்சி முகாமை துவக்கி…

3 days ago

மயிலாப்பூரில் நடைபெற்ற மகாராஷ்டிர தின நிகழ்ச்சியில் மாநில ஆளுநர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

மகாராஷ்டிர சங்கம் சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி ஆடிட்டோரியத்தில் சத்ரபதி சிவாஜி ஜெயந்தி மற்றும் மகாராஷ்டிரா தினத்தை மே…

5 days ago

எம்.எல்.ஏ., ஸ்பான்சர்களுடன் சேர்ந்து, பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி முகாமை நடத்துகிறார்.

மயிலாப்பூரில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 30 பெண்கள் தற்போது மந்தைவெளிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இலவச தையல் பயிற்சி…

5 days ago