செய்திகள்

கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உற்சவம்: போக்குவரத்து, கழிப்பறைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை வழங்குவது சம்பந்தமாக நடைபெற்ற ஆய்வு கூட்டம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு, கோயில் செயல் அலுவலர் ஆர் ஹரிஹரன் தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மயிலாப்பூர் டிஜிபி ரஜத் சதுர்வேதி, மயிலாப்பூர் காவல் கண்காணிப்பாளர் எம்.ரவி, மாநகராட்சி, மெட்ரோ வாட்டர், தீயணைப்புத் துறை, ஜிசிசி சுகாதார மையம், போக்குவரத்து காவல் துறை, TANGEDCO மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பழைய பி.எஸ். பள்ளி மைதானத்தில் வாகன நிறுத்தம்
நடைபாதை கடைகளை அகற்றுதல்
மாட வீதிகள் நோ பார்க்கிங் மண்டலமாக மாற்றுதல்
24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை
மொபைல் கழிப்பறைகள்
கூடுதல் குப்பை தொட்டிகள்
அறுபத்து மூவர் திருவிழா அன்று கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டுகோள்.
சான்றளிக்கப்பட்ட உணவு மட்டுமே விநியோகித்தல்
கோவிலில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் அமைத்தல்

மேற்கண்ட திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

செய்தி: எஸ்.பிரபு

admin

Recent Posts

தற்கொலை செய்து கொண்ட ஒருவரை இழந்த மக்களுக்கு ஆதரவாக சேவையை தொடங்கும் SNEHA அமைப்பு.

ஆர்.ஏ புரத்தில் உள்ள SNEHA, தற்கொலை தடுப்பு சமூக அமைப்பானது, ஏப்ரல் 25 அன்று தற்கொலைக்குப் பிறகு ஆதரவு (SAS)…

2 days ago

இமயத்தின் சிறுகதைகளை அடிப்படையாகக் கொண்ட நாடகம். ஏப்ரல் 27 மாலை. ஆழ்வார்பேட்டை

சாகித்ய அகாடமி வெற்றியாளர் இமயத்தின் தமிழ் சிறுகதைகளை தழுவி பிரசன்னா ராமசாமி இயக்கிய நாடக அரங்கேற்றம் ஏப்ரல் 27 அன்று…

2 days ago

சென்னை மெட்ரோ: திருமயிலை ரயில் நிலையம் அருகில் கால்வாய் பாலம் இருந்த பகுதியில் ஆழமான அகழாய்வு.

லஸ் மண்டலத்தில் பணிபுரியும் சென்னை மெட்ரோவின் ஒப்பந்ததாரர் திருமயிலை எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையம் எதிரே உள்ள ராமகிருஷ்ண மடம் சாலையில்…

2 days ago

கோடை நாடக விழா. ஏப்ரல் 22 முதல். 12 தமிழ் நாடகங்கள்.

ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில், கார்த்திக் பைன் ஆர்ட்ஸின் பிரபலமான வருடாந்திர கோடை நாடக விழா நடைபெறவுள்ளது. 12 நாடகங்கள்.…

6 days ago

லஸ்ஸில் பூங்காவில் புத்தகம் வாசித்தல் அமர்வு. இது குழந்தைகளுக்கான சிறப்பு அமர்வு . ஏப்ரல் 21, மாலை 4 மணி.

மயிலாப்பூரில் உள்ள சைலன்ட் ரீடிங் இயக்கம் குழு ஏப்ரல் 21, மாலை 4 மணிக்கு, ஒரு மணி நேரம், மக்களைச்…

7 days ago

மறைந்த திரைப்பட இயக்குனர் கே.சுப்ரமணியத்தின் 120வது பிறந்தநாள் விழா.

இன்று சனிக்கிழமை மாலை (ஏப்ரல் 20), டிடி கே சாலையில் உள்ள நாரத கான சபாவின் அரங்கத்தில், பிரபல மறைந்த…

7 days ago