கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உற்சவம்: போக்குவரத்து, கழிப்பறைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவை வழங்குவது சம்பந்தமாக நடைபெற்ற ஆய்வு கூட்டம்.

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் மார்ச் 28 ஆம் தேதி தொடங்கும் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு, கோயில் செயல் அலுவலர் ஆர் ஹரிஹரன் தலைமையில் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.

கோவில் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், மயிலாப்பூர் டிஜிபி ரஜத் சதுர்வேதி, மயிலாப்பூர் காவல் கண்காணிப்பாளர் எம்.ரவி, மாநகராட்சி, மெட்ரோ வாட்டர், தீயணைப்புத் துறை, ஜிசிசி சுகாதார மையம், போக்குவரத்து காவல் துறை, TANGEDCO மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

பழைய பி.எஸ். பள்ளி மைதானத்தில் வாகன நிறுத்தம்
நடைபாதை கடைகளை அகற்றுதல்
மாட வீதிகள் நோ பார்க்கிங் மண்டலமாக மாற்றுதல்
24 மணி நேர ஆம்புலன்ஸ் சேவை
மொபைல் கழிப்பறைகள்
கூடுதல் குப்பை தொட்டிகள்
அறுபத்து மூவர் திருவிழா அன்று கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டுகோள்.
சான்றளிக்கப்பட்ட உணவு மட்டுமே விநியோகித்தல்
கோவிலில் நுழைவு மற்றும் வெளியேறும் பாதைகள் அமைத்தல்

மேற்கண்ட திட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.

செய்தி: எஸ்.பிரபு

Verified by ExactMetrics