செய்திகள்

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் இந்த சீசனுக்கான நாட்டிய விழா தொடங்கியது.

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனின் மெயின் அரங்கில் வியாழன் மாலை இந்த சீசனுக்கான வருடாந்திர நாட்டிய விழா தொடங்கப்பட்டது.

நடன குரு ஊர்மிளா சத்யநாராயணன் மற்றும் அவரது நடனக் கலைஞர்கள் ‘கோதா’ நடன நிகழ்ச்சியை வழங்கினர். நடன நிகழ்ச்சி நடைபெற்ற ஆடிட்டோரியத்தில் இருந்த பெரும்பாலானோர் குரு ஊர்மிளாவின் அகாடமியில் நடனம் கற்கும் பெண்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள். முன்னதாக நடனக் கலைஞர் கயல்விழி கபிலனின் சோலோ பரதநாட்டியம் நடந்தது.

துவக்க விழாவில் அப்பல்லோ மருத்துவமனையின் ப்ரீத்தா ரெட்டி மற்றும் நடன குரு பத்மா சுப்ரமணியம், நல்லி குப்புசாமி மற்றும் என். ரவி ஆகியோர் பங்கேற்றனர்.

விழாவில் பாரதிய வித்யா பவன் தலைவர் கே.என்.ராமசுவாமி, இந்த நாட்டிய திருவிழா (டிச.26 வரை நடைபெறும்) வாரநாட்களில் இரண்டு நடன நிகழ்ச்சிகளும், வார இறுதி நாட்களில் மூன்று நடன நிகழ்ச்சிகளும் நடைபெறும் என்றும், நடன நிகழ்ச்சியை கண்டுரசிக்க அனைவருக்கும் அனுமதி உண்டு என்று தெரிவித்தார். மேலும் நாட்டிய நாடன நிகழ்ச்சிகள் www.chennaibhavans.org என்ற வலைதளத்திலும் ஒளிபரப்பப்படுகிறது.

admin

Recent Posts

குழந்தைகளுக்கான பாரதிய வித்யா பவனின் இரண்டாவது பட்டறைகள். மே 20 முதல்

மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா விடுமுறை நாட்களில் குழந்தைகளுக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை வழங்குகிறது. திட்டமிடப்பட்ட திட்டங்கள்…

15 hours ago

கல்வி வாரு தெருவில் இந்த அரைகுறை சாக்கடை மேன்ஹோல் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

கல்வி வாரு தெரு, வித்யா மந்திர் பள்ளி வாசலை ஒட்டிய தெரு, பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய தெரு போன்ற இடங்களில்…

23 hours ago

அடையாறு ஆற்றில் நீர்தாமரைகள்: படகு கிளப்பில் படகோட்டிகள் ஏமாற்றம்.

படகு கிளப்பின் கரையை சுற்றியுள்ள அடையாறு ஆற்றில் உள்ள நீர்தாமரைகள் மற்றும் செடிகள் படர்ந்துள்ளன. இது கிளப்பில் படகோட்டுபவர்களை விரக்தியில்…

1 day ago

கற்பகம் அவென்யூ பூங்காவில் நாய்க்குட்டிகள் காணப்படுகின்றன. அவர்களை யாராவது தத்தெடுக்கலாம்.

ஆர்.ஏ.புரத்தின் கற்பகம் அவென்யூ மண்டலத்தில் உள்ள ஜி.சி.சி பூங்காவில் ஒன்றிரண்டு நாய்க்குட்டிகள் காணப்பட்டன. மூன்று நாட்களுக்கு முன்பு பூங்காவிற்குச் சென்ற…

1 day ago

மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் நேச்சுரல் சலூன் திறப்பு.

ஸ்பா தெரபி முதல் ஹேர் ஸ்டைலிங் சேவைகள் வரை, இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட சலூன் அனைத்தையும் வழங்குகிறது. இதன் உரிமையாளர்…

2 days ago

ஆழ்வார்பேட்டை ரவுண்டானாவில் புதிய காபி மற்றும் சிற்றுண்டி கடை

மெட்ராஸ் காபி ஹவுஸ் முசிறி சுப்ரமணியம் சாலையில் (ஒரு காலத்தில் ஆலிவர் சாலை என்று அழைக்கப்பட்டது) ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்…

3 days ago