தற்போது அந்த இடம் அம்பத்தூரில் உள்ள தொழிற்பேட்டை போல் காட்சியளிக்கிறது.
ஜீசஸ் கால்ஸ் வளாகத்திற்கு எதிரே உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் இப்போது சென்னை மெட்ரோவின் பரபரப்பான பணியிடமாக உள்ளது. மேலே இருந்து பார்த்தால், இரவில், அது சுறுசுறுப்பாக இயங்குவதை பார்க்கலாம்.
சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் இந்த இடத்திலிருந்து, ரயில் பாதையை தோண்டத்தொடங்கியுள்ளது. ஏனென்றால் இங்கிருந்து தெற்கு பக்கம் நோக்கி செல்லும் ரயில் பாதை நிலத்திற்கு அடியில் செல்கிறது.
அடையாறு ஆற்றுக்கு அடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும், இது சவாலானது ஆனால் கடினமான பணி அல்ல என்று சென்னை மெட்ரோ பொறியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பணியின் ஒரு பகுதியாக, ஆர்.கே. மடம் சாலை ஓரத்தில் தள எல்லைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
மந்தைவெளி எம்.டி.சி பேருந்து முனைய சந்திப்பில், ஆர்.கே. மட சாலையின் நடுவில் ஒரு சிறிய இடம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது, அதே நேரத்தில் ராஜா தெரு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண் பரிசோதனை முடிந்துவிட்டது.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…