மாலை வரை ஏறக்குறைய ஏழு மணி நேரத்தில் 30,000 எண்ணெய் விளக்குகள் பெண்களால் ஏற்றப்பட்டன. பின்னர், மயிலாப்பூரில் நூற்றுக்கணக்கான மக்கள் பிரார்த்தனை செய்தனர்.
இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகள் மாலை நேரத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே தொடங்குவதாக கோயில் அறங்காவலர்கள் தெரிவித்தனர். விளக்குகளைப் வைக்க மரத்தாலான பலகைகள் அமைக்கப்பட்டது.
பின்னர் தன்னார்வலர்கள் அனைத்து விளக்குகளையும் நிரப்ப நல்லெண்ணெய் பயன்படுத்தி, திரிகளை வைத்து, குறிப்பிட்ட நேரத்தில், விளக்குகளை ஏற்றி, அவை அனைத்தும் எரிவதை உறுதி செய்தனர்.
மாலையில் பெருமாள், தாயார் மண்டபத்தில் வைக்கப்பட்டு, மங்கள ஆரத்தி முடிந்து, பெரிய பித்தளை விளக்கில் தீபம் ஏற்றும் நிகழ்ச்சியை தலைமை அர்ச்சகர் தொடங்கி வைத்தார்.
இது குறித்து கோவில் அறங்காவலர் முகுந்தன் கூறுகையில், ‘அடுத்த ஆண்டிற்கான திட்டத்தில் நிரந்தர பித்தளை விளக்குகள் அமைக்கப்படும்.என்று கூறினார்.
மார்கழி காலத்தில் கோயில் நிர்வாகம் கச்சேரிகளை இங்கு நடத்துகிறது.
டிசம்பர் 16-ஆம் தேதி காலை 5.30 மணிக்கு மேல், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள மாட வீதிகள் சிறப்புறப் பெற்றன;…
தெற்கு மாட வீதி மற்றும் ஆர்.கே.மட தெரு சந்திப்பில் அமைந்துள்ள அன்னவிலாஸ் உணவகம் மூடப்பட்டுள்ளது. இங்குள்ள ஒரு போர்டு, புதுப்பிப்பதற்காக…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனை பெட்டியை நிறுவியுள்ளது. மக்கள் தங்கள் அனுபவங்கள்/ ஆலோசனைகள்/ யோசனைகள்…
மயிலாப்பூர் ஆர்.கே.எம்.விவேகானந்தா கல்லூரியின் மாலை நேரக் கல்லூரி பிரிவு தொடங்கி 50 ஆண்டுகள் ஆகிறது. மேலும் இந்த மைல்கல்லை இந்த…
ஸ்போகன் இங்கிலீஷ் வகுப்புகளில் கலந்துகொள்ள ஆர்வமுள்ள ஏழை மாணவர்களுக்கு உதவவும், அவர்களின் தகவல் தொடர்புத் திறனை மேம்படுத்தவும், ராஜா அண்ணாமலைபுரம்…
ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள சிபி ஆர்ட் சென்டரில் சி பி ராமசுவாமி ஐயர் அறக்கட்டளை நடத்தும் நிகழ்ச்சியில் ‘கோயில்…