நாகேஸ்வரராவ் பூங்காவில் ஓவிய விழா: பிப்ரவரி 25

ஓவிய விழா 2024 பதிப்பு பிப்ரவரி 25, ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் இரவு 7.30 மணி வரை லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் நடைபெறவுள்ளது.

இந்த விழா, கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தவும், மக்கள் பலவிதமான பாணிகள் மற்றும் படைப்புகளை பார்வையிட்டு ரசிக்கவும், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சுந்தரம் பைனான்ஸ் ஒரு பொது இடத்தை வழங்குகிறது.

ஆர்ட் ஃபெஸ்ட் ஒரு பொது ஓவிய விழா (இலாப நோக்கமற்றது) மற்றும் பிப்ரவரி 25 நிகழ்ச்சியில், 90 கலைஞர்கள் – அனைத்து வயதினரும், சிலர் சென்னைக்கு வெளியில் இருந்து, பங்கேற்பார்கள்.
அதிக பதிவு செய்ததன் காரணமாக பதிவு திறக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குப் பிறகு நிறுத்தப்பட்டது.

ஒவ்வொரு கலைஞரும் திறந்தவெளி பூங்காவில் தங்களின் படைப்புகளை வெளிப்படுத்த 6 அடி இடைவெளியை பயன்படுத்தவுள்ளனர் – ஒரு மேஜை, ஒரு நாற்காலி மற்றும் ஓவியங்களைத் தொங்கவிட அடிப்படை உலோக கம்பி.ஆகியவை அங்கு இருக்கும்.

குழந்தைகளுக்கான இரண்டு பட்டறைகள், அதே நாளில் நடைபெறும் (விவரங்கள் விழாவிற்கு ஒரு வாரத்திற்கு முன் வெளியிடப்படும்).

விழா பற்றிய மேலும் புதிய விவரங்களை அறிய பின்தொடரவும், https://www.facebook.com/artmartchennai/

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 days ago

மெரினா கடற்கரையின் ஒரு பகுதியை இராணி மேரி கல்லூரி மாணவிகள் சுத்தம் செய்தனர்.

ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…

2 days ago

புனித தாமஸின் விழா: சாந்தோம் கதீட்ரலில் பேராயர் கொடியை ஏற்றினார்.

ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…

3 days ago

திருவேங்கடம் சாலை சீரமைக்கப்பட்டது: ஆனால் சாலை சந்திப்பு மற்றும் தேவநாதன் தெரு ஆகிய இடங்களில் இன்னும் வேலை முடியவில்லை.

மந்தைவெளியில் வசிப்பவர்கள், திருவேங்கடம் தெரு - தேவநாதன் தெரு மற்றும் வெங்கடகிருஷ்ணா சாலையில் தொடங்கப்பட்ட சாலை தொடர் வேலைகளை ஜி.சி.சி.…

3 days ago

ஆர்.ஏ.புரத்தில் உள்ள ஜி.சி.சி.யின் மறுசுழற்சி பொருட்கள் சேமிக்கும் இடத்தில் தீ விபத்து.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள காமராஜ் சாலையில் அமைந்துள்ள சென்னை மாநகராட்சியின் அப்புறப்படுத்தப்பட்ட பொருட்களுக்கான முற்றத்தில் இன்று புதன்கிழமை (ஜூலை 2) காலை…

4 days ago

நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்.

பூஜ்யஸ்ரீ மதியொலி சரஸ்வதி பிருந்தாவன் என்று அழைக்கப்படும் டாக்டர் ரங்கா சாலையில் உள்ள நந்தலாலா மையத்தில் வராஹி நவராத்திரி கொண்டாட்டங்கள்…

7 days ago