செய்திகள்

மயிலாப்பூர் தபால் நிலையத்தில், முதியோர்கள் ஆதார் அட்டை சேவை மையத்தை அணுகுவது மிகுந்த சிரமமாக உள்ளது.

மயிலாப்பூர் அஞ்சல் அலுவலகம் பொதுமக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்குகிறது மேலும் அவ்வப்போது மேலும் பல புது சேவைகளை சேர்க்கிறது.

ஆனால் அதன் வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு அவர்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு சில அடிப்படை வசதிகள் உள்ளதா?

சாந்தோமை சேர்ந்த ஒருவர், தபால் அலுவலக மேலாளர்கள் ஒரு தீவிரமான பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும். பொது சேவைகளுக்கான கவுண்டர்கள் உள்ள சில பகுதிகளை, மூத்த குடிமக்கள் அணுகும் வகையில் எளிதாக்க வேண்டும், முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய இடம் ஆதார் அட்டை சேவைகள் பிரிவு என்று கூறுகிறார்.

95 வயதான தனது தாயாரின் மொபைல் எண்ணை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும், அதை தபால் நிலையத்தில் செய்து கொள்ளலாம் என்று, தபால் அலுவலகத்திற்கு தனது தாயாருடன் வந்த அவருக்கு கசப்பான அனுபவம் ஏற்பட்டதாக சசிகலா சந்திரன் கூறுகிறார்.

மூத்த குடிமக்களின் கைரேகைகள் தேய்ந்து போவதால், கருவிழி சரிபார்ப்பிற்காக ஆதார் அட்டை போன்ற ஆவணங்களில் அடையாளத்தை இ சேவை அலுவலகத்திலோ அல்லது தபால் நிலையத்திலோ கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் என்கிறார்.

கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில், ஆதார் அட்டை சேவைகள் வழங்கப்படும் பகுதி கட்டிடத்தின் அடித்தளத்தில் அமைந்துள்ளது, அங்கு மூத்தகுடிமக்கள் எளிதில் சென்று வர முடியாதவாறு மூன்று சீரற்ற படிகள் உள்ளன. இதனால் அவர்கள் பெரும் சிரமத்தை அனுபவிக்க வேண்டியுள்ளது.

மேலும், “வயதானவர்கள் வழுக்கி விழுந்தால் என்ன செய்வது? முதியோர்கள் தேவையற்ற சிரமத்திற்கு ஆளாகாமல் இருக்க இந்திய தபால் அதிகாரிகளால் ஏன் மாற்று ஏற்பாடுகளை செய்ய முடியாது. என்று கேட்கிறார் சசிகலா சந்திரன்.

கைரேகை சரிபார்ப்பிற்காக சாந்தோமில் உள்ள தங்கள் வீட்டிற்குச் வந்த தபால்காரருக்கு சசிகலா பாராட்டு தெரிவிக்கிறார். “அவர்கள் மிகவும் கடமைப்பட்டவர்களாகவும் அன்பானவர்களாகவும் இருந்தனர்,” என்று அவர் கூறுகிறார்.

புகைப்படம்: சசிகலா சந்திரன்.

<<மயிலாப்பூர் மண்டலத்தில் முதியவர்களை பாதிக்கும் பிரச்சினைகள் உள்ளதா? செய்திகளை எங்களுடன் பகிரவும்.>>

admin

Recent Posts

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் நவம்பர் 20ம் தேதி காலையில் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான முதல் சடங்கு தொடங்கியது. தெருக்கள்…

2 days ago

லூப் ரோட்டின் கடைசியில் மீன் சந்தை மற்றும் கடல் உணவு வளாகத்தை நிறுவ ஜிசிசி திட்டம்

சென்னை மாநகராட்சி மெரினா லூப் சாலையின் தெற்குப் பகுதியில் மீன் சந்தை மற்றும் உணவு விடுதிக்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. இத்திட்டம்…

3 days ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை

ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் திங்கள்கிழமை மாதிரி…

4 days ago

மாநகராட்சி துப்புரவு அமைப்பு வடக்கு சித்திரகுளம் தெருவை சுத்தமாக்கியது.

சித்திரகுளம் வடக்கு வீதி இப்போது சுத்தமாக காட்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சி உள்ளூர் பொறியாளர் தலைமையில் துப்புரவுப் பணி நடந்தது. இது…

4 days ago

இலவச பல் பரிசோதனை முகாம். நவம்பர் 18 முதல் 22 வரை

ஆர் ஏ புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபா வளாகத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் இலவச பல் பரிசோதனை…

5 days ago

பருவமழை 2024: கோயில் குளங்களில் தண்ணீர் நிரம்பி வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மயிலாப்பூர் மண்டலத்தில் மழை பெய்யும் போது நின்று உற்று நோக்கும் நல்ல இடங்களில் ஒன்று இப்பகுதியில் உள்ள கோவில் குளங்கள்.…

1 week ago