சி.பி.ஆர். சுற்றுச்சூழல் கல்வி மையம், ஆழ்வார்பேட்டை பள்ளிகளுக்கான ‘நிலைத்தன்மை’ குறித்த நிகழ்ச்சியை நடத்தியது.

ஆழ்வார்பேட்டையில் உள்ளசி.பி.ஆர் சுற்றுச்சூழல் கல்வி மையம் (CPREEC) தென்னிந்திய மாநிலங்களான கர்நாடகா, கோவா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் ‘நிலைத்தன்மை’ குறித்த தொடர் நிகழ்ச்சிகளை நடத்தியது.

பள்ளி மாணவர்களின் குழுக்கள் உயிர் பன்முகத்தன்மை, நீர் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவற்றின் நிலைத்தன்மை குறித்த திட்டங்களை சமர்ப்பித்தனர்.

மாநில அளவில் தேர்வு செய்யப்பட்ட பள்ளி அணிகளை கவுரவிப்பதற்காக கடந்த வாரம் தமிழகத்தின் மண்டல அங்கீகார நிகழ்ச்சி நடைபெற்றது; இது CPR மாநாட்டு மையத்தில் நடைபெற்றது.

CPREEC ஒரு திறமையான பிராந்திய மதிப்பீட்டுக் குழுவை அமைத்தது மற்றும் தமிழ்நாட்டின் பள்ளிகளில் இருந்து 118 திட்ட சமர்ப்பிப்புகளில் இருந்து மாநில அளவில் 12 பள்ளி குழுக்களை தேர்ந்தெடுத்து பட்டியலிட்டது.

இந்நிகழ்ச்சியில் 12 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர் குழுக்கள் தங்களது செயல்திட்டங்களை வழங்கினர். பெங்களூரு விப்ரோ அறக்கட்டளையுடன் இணைந்து இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது

தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 12 பள்ளிக் குழு உறுப்பினர்களுக்கு எர்தியன் 2022-23ன் மண்டல வெற்றியாளர் விருதுகளை இயக்குநர் டாக்டர் பி.சுதாகர் வழங்கினார்.

தூய்மை தஞ்சாவூர் இயக்கத்தின் செயலாளர் டாக்டர் ராம் மனோகர் கலந்து கொண்டு உரையாற்றி, புதுமையான பணிகளை செய்த அணிகளை பாராட்டி பேசினார். புவியியல் – நிலைத்தன்மை கல்வித் திட்டத்தின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உ.திருநாவுக்கரசு செயல்பாடுகள் குறித்து பேசினார்.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் தவானோத்சவம். மார்ச் 1 முதல் 3 வரை

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…

2 days ago

புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் கும்பாபிஷேகம்: பிப்ரவரி 27ல்.

மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…

3 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் பங்குனி திருவிழா: பிப்ரவரி 26 மாலை ‘லக்ன பத்திரிக்கை’ வாசிப்பு நிகழ்ச்சி

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…

5 days ago

வண்ணமயமாக ஒளிரூட்டப்பட்ட ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் கோபுரங்கள் மற்றும் விமானங்கள்.

ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…

7 days ago

எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட்டில் தொழில்நுட்ப கோளாறு.

பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…

1 week ago

சாம்பல் புதனைக் குறிக்கும் வகையில் தேவாலயங்களில் திருப்பலிகள்

அனைத்து உள்ளூர் தேவாலயங்களிலும் பிப்ரவரி 18 அன்று சாம்பல் புதன் அனுசரிக்கப்பட்டது. இது தவக்காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது, இது பிரார்த்தனை,…

2 weeks ago