குற்றம் நடந்த இடத்தில் தங்களுக்குக் கிடைத்த தகவல்கள் மற்றும் சந்தேக நபர்களின் தொலைபேசி அழைப்பு பதிவுகளின் அடிப்படையில், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஓங்கோலில் குற்றவாளிகளை கண்டுபிடித்து, அங்கு அவர்கள் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
தம்பதிகள் – ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவி அனுராதா – அவர்களுடைய மகளுடன் இருந்தனர். கடந்த சனிக்கிழமை அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்துவிட்டனர்; அவர்கள் சனிக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் விமான நிலையத்திலிருந்து நீணடகாலமாக அவர்களது வீட்டில் பணியற்றிவரும் வீட்டு உதவியாளர் மற்றும் நேபாள டிரைவரால் வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தம்பதியரின் மகள் அமெரிக்காவிலிருந்து அவர்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக சென்று விட்டனரா என்று விசாரிப்பதற்காக தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அவர்களுடைய தொலைபேசிகள் அணைக்கப்பட்டிருந்தது.
பின்னர் அவர் தன்னுடைய உறவினர்களுக்கு தகவல் கொடுத்து அவர்கள் ஜம்மி காம்ப்ளக்ஸ் மண்டலத்தில் ராயப்பேட்டை ஹை ரோட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள வீட்டிற்கு சென்று பார்த்தபோது தம்பதிகள் வீட்டில் இல்லை. உடனடியாக மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
வீட்டில் இருந்து விசாரணை தொடங்கியது. போலீசார் டிரைவரை தொடர்பு கொள்ள முயன்றனர், ஆனால் அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. மேலும் தம்பதியரின் வீட்டில் இருந்த பெட்டகம் மற்றும் அலமாரி உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததையும் கண்டனர்.
டிரைவரின் அழைப்பு பதிவுகள் கண்காணிக்கப்பட்டு, சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவரும் அவரது கூட்டாளியும் ஆந்திராவில் கைது செய்யப்பட்டனர்.
தம்பதியினர் வீட்டிற்குள் நுழைந்த உடனேயே ஓட்டுநரும் அவரது கூட்டாளியும் கனரக கருவியால் தம்பதியை தாக்கியுள்ளதால் தம்பதிகள் மரணமடைந்துள்ளனர் என்று போலீசார் கூறுகின்றனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வீட்டில் இருந்த ரத்தக் கறைகளை சுத்தம் செய்து, இறந்தவர்களை காரில் ஏற்றி, மாமல்லபுரம் அருகே உள்ள பண்ணைக்கு வீட்டில் இறக்கி, சடலங்களை ஒரு குழியில் புதைத்து, பின்னர் நகரத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…