டெல்லி தாபா, ஆழ்வார்பேட்டையில் அமராவதி உணவக வளாகத்தில் புதிதாக திறக்கப்பட்ட உணவகம், இது வட இந்திய உணவுகளுக்கு ஏற்ற சிறந்த இடமாக உள்ளது.
உணவக மேலாளர் வினோத் கூறுகையில், உணவருந்துபவர்கள், இங்கு சில பிரபலமான உணவுகளை தேர்ந்தெடுக்கலாம் என்கிறார்.
மேலும் அவர் தனது பரிந்துரைகளை இங்கே பகிர்ந்து கொள்கிறார்.
முர்க் லாசோனி கபாப் (கார்லிக் சிக்கன்), கடக் ஷீக் கபாப் மற்றும் தாபா முர்க் மசாலா, போன்ற உண்வுகள் கிடைக்கும். ஆனால் நீங்கள் ரொட்டிகளுக்கு ஒரு கிரேவியை கண்டிப்பாக ஆர்டர் செய்ய வேண்டும்.
மேலும் தாபாவின் பிரியாணிகளையும் பரிந்துரைக்கிறார் அவற்றில் குறிப்பிடத்தக்கது மட்டன் தம் பிரியாணி.
மெனுவில் பலவிதமான நான் மற்றும் ரொட்டிகளும் உள்ளன – சீஸ் அடிப்படையிலானது இங்கு பிரபலமாக உள்ளது.
மேலும் கோடையில், மாம்பழ லஸ்ஸியுடன் உணவைச் சாப்பிடலாம். ஆம், உங்கள் விருப்பமாக இருந்தால், சாதாரண ஜம்போ லஸ்ஸியையும் ஆர்டர் செய்யலாம்.
உணவகம் காலை 11.30 மணி முதல் மாலை 4 மணி வரையிலும், இரவு 7 முதல் 11.30 மணி வரையிலும் திறந்திருக்கும். மியூசிக் அகாடமிக்கு எதிரே அமைந்துள்ளது. பார்க்கிங் இடம் உள்ளது.
டேபிள் முன்பதிவு செய்ய 9176886655 என்ற எண்னை அழைக்கவும்.
டெல்லி தாபாவின் இந்த ஒரு நிமிட வீடியோவை பாருங்கள் – https://www.youtube.com/watch?v=heVKqdiLKu8
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…