உங்களுக்கு தெரியுமா?

  • காதுகேளாதவர்களுக்கான கிளார்க் பள்ளியில் மாணவர் சேர்க்கை.

    இந்த பள்ளி எப்போது தொடங்கப்பட்டது?
    1970 இல் மயிலாப்பூரில் தொடங்கப்பட்டது.

    இந்த பள்ளியில் யார் யார் சேரலாம்?
    செவித்திறன் குறைபாடுள்ள, அறிவுத்திறன் குறைபாடுள்ள மற்றும் காது கேளாத பார்வையற்ற குழந்தைகளை இங்கு சேர்க்கலாம்.
    ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கூட மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

    மாற்றுத்திறனாளிகள் குழந்தைகளை கிளார்க் போன்ற பள்ளிகளில் சேர்க்க வேண்டும், இதனால் சிறப்புக் கல்வியாளர்கள் அவர்களுக்கு தொழில்முறை கல்வியை சிறப்பாக கற்பிக்க முடியும்.

    இந்த பள்ளியில் எந்த விதமான பாடத்திட்டம் கடைபிடிக்கப்படுகிறது?

    இங்குள்ள ஆசிரியர்கள் ஸ்டேட் போர்டு மற்றும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஓபன் ஸ்கூலிங் (NIOS) ஸ்ட்ரீமையும் குழந்தைகளுக்கு கற்பிக்கின்றனர்.

    இந்த பள்ளி மயிலாப்பூரில் எங்குள்ளது?
    கிளார்க் பள்ளி, மயிலாப்பூர் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, எண்.3, 3வது தெருவில் உள்ளது. தொலைபேசி எண்: 2847 5422

    www.theclarkeschool.com.


  • நீங்கள் எந்த வார்டில் வசிக்கிறீர்கள்?
பெருநகர சென்னை மாநகராட்சி 200 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரின் பெரும்பகுதி கீழே பட்டியலிடப்பட்டுள்ள 7 வார்டுகளின் கீழ் வருகிறது. குடிமை, சுகாதாரம், தேர்தல்கள் மற்றும் பிற உள்ளூர் பிரச்சனைகளை தெரிவிக்க நீங்கள் இருக்கும் வார்டு மற்றும் மண்டலம் குறித்து நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

மயிலாப்பூர் மண்டலத்தின் ஏழு வார்டுகளின் கீழ் வரும் பகுதிகளின் விரிவான அவுட்லைன் கீழே உள்ளது.

வார்டு 121 – டாக்டர் ஆர்.கே.சாலை, பாலகிருஷ்ணன் தெரு, பீமசேனா கார்டன்ஸ், பி.எஸ்.சிவசுவாமி சாலை மண்டலம், வி.பி.கோயில் தெரு பகுதிகள், எம்.கே.அம்மன் கோயில் பகுதிகள் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

வார்டு 122 – போட் கிளப் பகுதிகள் மற்றும் டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை தெருக்கள், ஸ்ரீராம் நகர், சீத்தம்மாள் காலனி தெருக்களின் பகுதிகள்.

வார்டு 123 – அபிராமபுரம் தெருக்கள், டிமான்டி காலனி, பக்தவத்சலம் சாலை பகுதிகள, அசோகா, பாவா தெருக்கள், சி.பி.ராமசாமி சாலை, பீமன்னபேட்டை, சீத்தம்மாள் காலனியின் சில பகுதிகள், செயின்ட் மேரிஸ் சாலை (ஒருபகுதி), சாரதாபுரம், ஆனந்தபுரம், விஸ்வேஸ்வரபுரம், லஸ், கபாலி தோட்டம், கற்பகாம்பாள் நகர், விசாலாக்ஷி தோட்டம், லஸ் சர்ச் சாலை, ஆர் ஏ புரத்தின் 3, 4, 5, 6 மற்றும் 7வது பிரதான சாலைகளின் பெரும்பாலான பகுதிகள் உள்ளடக்கியது. .

வார்டு 124 – கிழக்கு அபிராமபுரம், வெங்கடேச அக்ரஹாரம் மண்டலம், கணபதி காலனி, ஆதம் மற்றும் ஆபிரகாம் தெருக்கள், லோகநாதன் காலனி, சித்ரகுளம் தெருக்கள், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் மண்டலம் & மாட வீதிகள், கச்சேரி சாலை, மாதவப் பெருமாள் கோயில் மண்டலம், நாட்டு சுப்பராய தெரு பகுதிகள், எம் கே அம்மன் கோயில் பகுதிகள், வித்யா மந்திர் பகுதிகள், ராமகிருஷ்ணாபுரம், ஸ்லேட்டர்புரம், பல்லக்கு-மாணியம் நகர், லீத் காஸ்டில் தெருக்களின் சில பகுதிகள்

வார்டு 125 – டூமிங்குப்பம், நொச்சிக்குப்பம், கைலாசபுரம், காரணீஸ்வரர், வாலீஸ்வரர் மற்றும் விருபாக்ஷீஸ்வரர் கோயில் பகுதிகள், மீனாம்பால்புரம் (சிட்டி சென்டருக்குப் பின்புறம்), அப்பு தெரு பகுதிகள், பஜார் சாலை பகுதிகள், தேவதி தெரு, நடுத் தெரு, சாந்தோம் நெடுஞ்சாலை, குயில் தோட்டம், ரோசரி சர்ச் சாலை, அரண்மனை சாலை, சல்லீவன் தெரு.

வார்டு 126 – மந்தைவெளிப்பாக்கம்(கிட்டத்தட்ட அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கியது), ஜெத் நகர், லீத் காஸ்டில் தெருக்களின் சில பகுதிகள்.

வார்டு 171 – ஆர்.ஏ.புரத்தின் தெற்கு முனை, வாலீஸ்வரர் தோட்டம், தெற்கு மந்தைவெளிப்பாக்கம், ரோகினி கார்டன்ஸ், எம்ஆர்சி நகர் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது. ஆர் கே நகர், கேசவபெருமாள்புரம், கிரீன்வேஸ் சாலை.

மேலும் விரிவான விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பில் சென்று பார்க்கவும்.
https://chennaicorporation.gov.in/others/StreetNames.pdf


  • ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லம்
பாலிடெக்னிக் மாணவர் சேர்க்கை இப்போது தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இல்லம் எப்போது தொடங்கப்பட்டது?

‘ராமகிருஷ்ணா மிஷன் ஸ்டூடண்ட்ஸ்’ ஹோம், 1905 இல் நிறுவப்பட்டது, இப்போது 650 ஏழ்மையான மாணவர்களின் வாழ்க்கை, தங்குமிடம் மற்றும் கல்விக்கு உதவி வருகிறது.

இங்கு யார் யார் கல்வி பயிலலாம்?

இங்குள்ள மாணவர்கள் பெரும்பாலானவர்கள் அகதிகள் அனாதைகள் அல்லது பொருளாதார ரீதியாக ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். இந்த இல்லம், 6 முதல் 10ம் வகுப்பு வரை பள்ளிப்படிப்பை நடத்துகிறது. இதில் ஒரு பாலிடெக்னிக் உள்ளது, இங்கு ஆட்டோமொபைல், கம்ப்யூட்டிங் மற்றும் மெக்கானிக்கல் ஆகிய மூன்று படிப்புகள் நடத்தப்படுகின்றன. கல்வி உறைவிடம் முற்றிலும் இலவசம்.

நீங்கள் இங்கு பயிலும் மாணவர்களுக்கு உதவலாம். ​​எழுதுபொருட்கள், குளியலரை பொருட்கள், மளிகைப் பொருட்கள், மருந்துகள் போன்றவற்றையும் இல்லம் ஏற்றுக்கொள்கிறது; இது இங்குள்ள சிறுவர்களுக்கு தேவையான ஒன்று.

இந்த கல்வியாண்டு ஆண்டு, பள்ளி படிப்பில் சேர்க்கை முடிவடைந்துள்ள நிலையில், பாலிடெக்னிக் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ளது.

இந்த இல்லத்தில் பயில்வதற்கு தகுதியான மாணவர்களை மக்கள் பரிந்துரைக்கலாம் என்று இல்ல ஊழியர்கள் கூறுகின்றனர்.

இங்கு பள்ளி படிப்புடன் வேறென்ன படிப்புகள் கற்றுக்கொடுக்கப்படுகிறது?

சுவாமி விவேகானந்தர் அமைத்த கொள்கைகளின் அடிப்படையில், குருகுல வாழ்க்கை முறையையும் கல்வியையும் பின்பற்ற சிறுவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் என்று ஊழியர்கள் கூறுகிறார்கள். யோகா, தியானம் மற்றும் ஆன்மீகப் பயிற்சியும் இங்குள்ள கல்வியின் ஒரு பகுதியாகும்.

இந்த பள்ளிக்கு எவ்வாறு உதவலாம்?

நன்கொடை வழங்க விரும்புவோர், மாணவர் இல்ல வளாகத்தில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். வாரத்தின் 7 நாட்களும் காலை 9.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை திறந்திருக்கும். மேலும் விவரங்களுக்கு 2499 0264 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கவும்


  • மாத்திரை மருந்துகள் எங்கெங்கு குறைந்த விலையிலும் மற்றும் தள்ளுபடி விலையிலும் கிடைக்கும்?
குறைந்த பட்சம் மூன்று மருந்து கடைகள்/மருந்தகங்கள் உள்ளன.

இங்கு மருந்துகளின் விலை சந்தை விலையை விட குறைவாக இருக்கும் அல்லது தள்ளுபடி விலையில் வழங்கப்படும். இந்த இடங்கள் மாதத்திற்கு மொத்தமாக மருந்துகளை ஆர்டர் செய்ய வேண்டியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும், மேலும் தங்களுடைய மாதாந்திர மருந்து செலவுகளில் கணிசமான தொகையை சேமிக்கலாம். இங்கு விற்கும் அனைத்து மருந்துகளும் சான்றளிக்கப்பட்ட மருந்துகளே.

மந்தைவெளியில் உள்ள ‘மக்கள் மருந்தகம்‘ இந்தியப் பிரதமரி இது பிரதம மந்திரி மலிவு விலை மருந்து திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மருந்துக் கடைகளின் ஒரு பிரிவு. பிரதான் மந்திரி பாரதிய ஜன் ஆஷாதி கேந்திரா. இவர்கள் வெவ்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யும் பொதுவான மருந்துகளை வழங்குகிறார்கள். இவை இரத்த அழுத்தம் / உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, இரைப்பை பிரச்சினைகள் போன்ற பிரச்சனைகளை பூர்த்தி செய்கின்றன, மற்றும் வைட்டமின்கள் மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளை உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாக, அமியோடிபைன் 5mg மருந்து சந்தையில் 10 மாத்திரைகளுக்கு ரூ.24 க்கு விற்கப்படுகிறத. இந்தக் கடையில் ரூ.4க்கு கிடைக்கிறது.

நேரம் – காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை; மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை. ஞாயிறு விடுமுறை.
முகவரி : நெ.3/9, மாரி செட்டி தெரு, மந்தைவெளி (மந்தைவெளி தபால் நிலையம் அருகில்). போன்: 98844 41067

R. A. புரத்தில் உள்ள TUCS நடத்தும் ‘காமதேனு மருந்தகம்‘, பில்ரோத் மருத்துவமனைகளுக்கு எதிரே அமைந்துள்ளது, உங்களுக்கு 20% தள்ளுபடி விலையில் மருந்துகளை விற்கிறது. முகவரி: நெ.17, 2வது மெயின் ரோடு, ஆர்.ஏ.புரம். போன்: 23453440.

மயிலாப்பூர் ஆர்.கே.மட் சாலையில் சமீபத்தில் திறக்கப்பட்ட TUCS ‘கூட்டுறவு மருந்தகம்‘ இது அனைத்து மருத்துவப் பொருட்களுக்கும் 20% தள்ளுபடி வழங்குகிறது.

மாத்திரைகள், ஊசிகள் மற்றும் சிரப்கள் முதல் பலவிதமான மருந்துகள் வரை இங்கே கிடைக்கும்.

இது காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். வாரத்தின் அனைத்து நாட்களும் ஆனால் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை. சில மருந்துகளை உள்ளூரிலுள்ள வீட்டுக்கே டெலிவரி செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முகவரி –நெ.90, ஆர்.கே. மட சாலை, மயிலாப்பூர் (ஸ்ரீ குமரன் சில்க்ஸ் அருகில்). தொலைபேசி: 2462 2409.


  • இ-சேவை மையத்தில் எந்தெந்த சேவைகள் கிடைக்கும்?
இ-சேவை மையம் அனைத்து பகுதிகளிலும் அமைந்துள்ளது, நமது வாழ்க்கைக்கு தேவையான முக்கிய ஆவணங்களை இந்த இ-சேவை மையம் வழங்குகிறது. 

பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்கள் முதல் சமூக பாதுகாப்பு திட்ட ஆவணங்கள் வரை, மற்றும் முதியோர் ஓய்வூதிய விண்ணப்பங்கள், நீங்கள் இங்கே விண்ணப்பிக்கலாம்.

இந்த சேவைகள் அனைத்தும் ஆன்லைனிலும் கிடைக்கும் மற்றும் உங்கள் வீட்டில் இருந்தே விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையமானது, வீட்டில் போதிய இன்டர்நெட் வசதி இல்லாதவரகள் மற்றும் முதியோர்கள், ஏழை எளியோர் ஆகியோர் தங்களுடைய அரசு சார்ந்த விண்ணப்பங்களை விண்ணப்பிக்க ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், இங்குள்ள ஊழியர்கள், சேவைகள்/திட்டங்களின் முறைகளை நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் முறையான முறையில் விண்ணப்பிப்பது மட்டுமல்லாமல், எவ்வித சிக்கல்களும் இல்லாமல் விரைவாக சான்றிதழ்களை பெற உங்களுக்கு வழிகாட்டுவார்கள். ஒரு குறிப்பிட்ட சேவையை வழங்க (முக்கிய ஆவணங்கள் ஆன்லைனில் சமர்ப்பிக்கப்பட வேண்டும்
தேவையான ஆவணங்களை ஊழியர்களிடம் வழங்கவேண்டும்).

இந்த இ-சேவை மையங்களில் கிட்டத்தட்ட 40 அரசு சார்ந்த சேவைகளை பெற விண்ணப்பிக்கலாம்.

நீங்கள் இங்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு சேவைக்கும் நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும் (சுமார் ரூ.40). உங்கள் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு, ஆவணத்தின் நகலைப் பெற வேண்டும் என்றால், இதற்காக நீங்கள் மையத்தை அணுகலாம்.

இ-சேவை மையம் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும்.

பெரும்பாலான இடங்களில், இ-சேவை மையங்கள், சென்னை மாநகராட்சி அலுவலகம் அல்லது வார்டு அலுவலகங்கள் அருகில் அமைந்துள்ளன.


  • அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையம் / ஆர்.ஏ.புரம் 
இந்த பயிற்சி மையத்தை மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி தலைமையில் அண்ணா இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்டின் கீழ் தமிழக அரசு நடத்துகிறது. இது ஆர். ஏ. புரத்தில் அமைந்துள்ளது.

இந்த பயிற்சி மையத்தின் நோக்கம் என்ன?
நவம்பர் மாதத்தில் நடத்தப்படும் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி வழங்குவது.

சேர தகுதியானவர் யார்?
இதில் சேர அங்கீகரிக்கப்பட்ட ஏதாவதொரு பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு (ஆகஸ்ட் 1 வரை)?
குறைந்தபட்சம் அனைத்து பிரிவினருக்கும் 21 வயது. அதிகபட்சம்: 32 வயது. பி.சி/எஸ்சி/எஸ்டி மற்றும் ஊனமுற்றோருக்கு மேலும் வயது வரம்பு சலுகைகள் உள்ளன.

சேர்க்கை எவ்வாறு நடத்தப்படுகிறது?
தமிழகம் முழுவதும் நடத்தப்படும் போட்டி நுழைவுத் தேர்வுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வில் இந்திய வரலாறு மற்றும் இந்திய தேசிய இயக்கம், இந்திய மற்றும் உலக புவியியல், இந்திய அரசியல் மற்றும் ஆளுமை, பொருளாதார மற்றும் சமூக மேம்பாடு போன்றவற்றில் 100 கேள்விகள் கேட்கப்படும். தேர்வு இரண்டு மணி நேரம் நடைபெறும். மதிப்பெண் தகுதி மற்றும் சமூக இடஒதுக்கீடு முறையின் அடிப்படையில், பயிற்சி மையத்தில் தங்கி பயிற்சி பெற 225 நபர்களுக்கும், பகுதிநேர பயிற்சிக்கு 100 நபர்களுக்கும் அனுமதியளிக்கப்படுகிறது.

முதன்மை தேர்வுக்கு தகுதிவாய்ந்தவர்கள் யார்?
யு.பி.எஸ்.சி நடத்தும் பிரிலிமினரி தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த அனைத்து நபர்களும் முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற தகுதியானவர்கள். யு.பி.எஸ்.சி பிரிலிமினரி தேர்வின் தேர்வு முடிவுகள் வெளிவந்தவுடன் ஒரு வாரத்திற்குள் முதன்மை பயிற்சி பெறுவோருக்கான தேர்வு பட்டியல் அறிவிக்கப்படுகிறது. முதன்மை தேர்வுக்கு பயிற்சி பெற விண்ணப்பங்கள் சென்னையிலுள்ள அகில இந்திய சிவில் சர்வீஸ் பயிற்சி மையத்தில் வழங்கப்படுகிறது.

குடும்ப வருமான உச்ச வரம்பை பொருட்படுத்தாமல் மூன்று மாதங்களுக்கு ரூ.3000/-உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மாதிரி ஆளுமை தேர்வுக்கு எவ்வாறு தயார்படுத்தப்படுகிறது?

யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வை பயிற்சி நிறுவனம் நடத்துகிறது. மாதிரி ஆளுமை தேர்வு அமர்வுகள் ஒரு வாரம் அல்லது இரண்டு வாரத்திற்குள் ஏற்பாடு செய்யப்படுகிறது. மாதிரி ஆளுமை தேர்வு அமர்வுகளை தவிர, அனுபவம் வாய்ந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ் அதிகாரிகள் மற்றும் பிரபல கல்வியாளர்களால் தேசிய / சர்வதேச பிரச்சினைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு
முகவரி – 163/1, காஞ்சி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, ஆர். ஏ. புரம் (கிரீன்வேஸ் சாலை).
தொலைபேசி – முதல்வர்: 044 2462 1909 அலுவலகம் : 044 2462 1475 (எந்த கேள்விகளுக்கும்)
மின்னஞ்சல் – aicssc.gov@gmail.com


  • ஆந்திர மகிளா சபாவில் வேலை செய்யும் பெண்களுக்கான விடுதி
பணிபுரியும் பெண்கள் மயிலாப்பூரில் பார்வையிட வேண்டிய ஒரு விடுதி இங்கே.
இது யாருக்கானது?
18 – 49 வயதுள்ள வேலை செய்யும் பெண்களுக்கானது. சேரும்போது தேவையான ஆவணங்கள் – வேலை வாய்ப்புக் கடிதம், ஆதார் / ரேஷன் கார்டு மற்றும் உள்ளூர் தொடர்பு நபரின் விவரங்கள்.

தங்குமிடத்தின் தன்மை
தங்குமிடங்கள், இரண்டு நபர்கள் தங்கும் வகையிலும் மற்றும் ஒருவர் மட்டும் தங்கும் வகையிலும் உள்ளது.

கட்டணம் மற்றும் வைப்பு தொகை
இரண்டு மாத வாடகை திருப்பிச் செலுத்தக்கூடிய வைப்புத்தொகை. ரூ.1000 பதிவு கட்டணம் திருப்பிச் செலுத்த முடியாதவை. (ஒருவர் தங்கக்கூடிய அறை – ரூபாய் 7500/6500 (மாதத்திற்கு) , இருவர் தங்குமிடம் ரூபாய் 5500 (மாதத்திற்கு) உணவு உட்பட அனைத்தும்.

அடிப்படை வசதிகள் 
அறைகள் சுத்தமாகவும், காற்றோட்டமாகவும், சுத்தமாகவும் உள்ளன: ஒரு பெரிய திறந்தவெளியைக் கொண்டுள்ளது. உணவு அனைவருக்கும் வழங்கப்படுகிறது, இது தொகுப்பின் ஒரு பகுதியாகும். இங்கு தங்குபவர்கள் துணிகளை தாங்களாகவே துவைத்து கொள்ள வேண்டும். வைஃபை வசதி இல்லை.

பின்பற்ற வேண்டிய சில கடுமையான விதிகள்
இங்கு தங்குபவர்கள் அனைவரும் இரவு 10 மணிக்குள் தங்கள் அறைகளுக்கு வந்து விடவேண்டும். அறைகளுக்குள் விருந்தினர்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை – அவர்கள் பொதுவான வரவேற்பு அறையில் பார்வையிடலாம். விடுதியை பார்வையிட ஆண்கள் யாரும் அனுமதிக்கப்படுவதில்லை – இரவு 7 மணிக்குப் பிறகு.

ஊனமுற்றோர் / மாணவர்களுக்கு சலுகைகள் ஏதேனும் உள்ளதா?
இந்த விடுதி வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே.

தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்.
அம்புஜம். S – 044 24994761, 044 42168979 ஐ தொடர்பு கொள்ளவும். நெ.109, லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர்.


  • மந்தைவெளிப்பாக்கத்தில் புதிய குடியிருப்பாளர்கள் சங்கம்

இந்த குழுவில் யார் சேரலாம்?
கிழக்கு சுற்றுவட்ட சாலை, மற்றும் 8 வது டிரஸ்ட் கிராஸ் தெரு, 9 வது டிரஸ்ட் கிராஸ் தெரு மற்றும் 10 வது டிரஸ்ட் கிராஸ் தெரு ஆகியவற்றில் வசிப்பவர்கள்.

உள்ளூர் பிரச்சினைகள் என்ன?
சங்கிலி பறித்தல் மற்றும் சிறிய திருட்டுகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வெற்று இடங்களில் குப்பைகளை கொட்டி தொல்லைகளை ஏற்படுத்துகின்றனர். இந்த பகுதியில் உள்ள கார் மற்றும் டாக்ஸி உரிமையாளர்கள் இங்குள்ள பூங்காவிற்கு அருகே உள்ள தெருக்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர்.

சங்கத்தின் முக்கிய நோக்கம் என்ன?
இந்த பகுதியை சுத்தமாகவும், பாதுகாப்பாகவும், வைத்திருப்பது மற்றும் சுற்றுசூழலை மாசுபடுத்தாமல் இருப்பது. பொது இடங்களில் அதிக தாவரங்களை வளர்ப்பது மற்றும் அழுக்கடைந்த சுவர்களில் பெரிய ஓவியங்களை வரைந்து அழகாக வைத்திருப்பது.

சங்கம் இப்போது உருவாக்கப்பட்டுள்ளதா?
இந்த பகுதியில் உள்ள 6 அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில் வசிப்பவர்கள் இணைந்துள்ளனர். மீண்டும் புதிய உறுப்பினர்கள் இணைந்தவுடன், குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் (RWA) உருவாக்கப்படும். உள்ளூர் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதற்கும் பயனுள்ள தகவல்களை அனுப்புவதற்கும் ‘ஈ.சி.ஆர் சமூகம்’ என்ற வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது.

தொடர்பு கொள்ளவா?
நீங்கள் இந்த பகுதியில் வசிப்பவர் மற்றும் சேர விரும்பினால் 9884688984 என்ற எண்ணில் ஷீலா டிசோஸாசாவை அழைக்கவும்.


  • மந்தைவெளி துணை தபால் அலுவலகம் சமீபத்தில் தனது புதிய கட்டிடத்திலிருந்து செயல்படத் தொடங்கி மக்களுக்கு சேவையாற்றி வருகிறது.

இந்த தபால் அலுவலகம் எங்கே உள்ளது?
– ஆர்.கே.மட சாலை மற்றும் மந்தைவெளி தெரு சந்திப்பில்.
இங்கு பொதுமக்களுக்கு எந்த வகையான சேவைகள் வழங்கப்படுகின்றன?
இங்கு தபால் சம்பந்தமான பொருட்கள் விற்பனை (முத்திரைகள், கவர்கள், அஞ்சல் அட்டைகள்), சேமிப்பு வங்கிக் கணக்கைத் திறத்தல் / மூடுவது, விரைவு தபால் மற்றும் பதிவு செய்யப்பட்ட அஞ்சல் சேவைகள் ஆகியவை அடங்கும்.
பார்சல்களும் இங்கே முன்பதிவு செய்யப்படுகின்றனவா?
ஆம். பார்சல்கள் மற்றும் அஞ்சல் கட்டுகள் இங்கே முன் பதிவு செய்யப்படுகின்றன.
 திறந்திருக்கும் நேரம்?
ஞாயிற்றுக்கிழமை தவிர அனைத்து நாட்களிலும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை திறந்திருக்கும்.
தொலைபேசியைத் தொடர்பு கொள்ளலாமா?
தொலைபேசி எண் : 24641298.

Verified by ExactMetrics