மயிலாப்பூர் மண்டலத்தில் சிறிய காலனிகள் உள்ளன, இந்த வார புயல் மழை, அவர்களின் இயல்பு வாழ்க்கையை பெருமளவு பாதித்துள்ளது.
சுந்தர கிராமணி தோட்டம் மற்றும் சண்முக பிள்ளை தெரு ஆகியவை ஹாமில்டன் பாலத்திற்கு அருகில், டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சிட்டி சென்டர் மாலுக்கு பின்புறம் அமைந்துள்ளது.
தினசரி கூலித் தொழிலாளர்கள், எலக்ட்ரீசியன்கள், பெயின்டர்கள் மற்றும் இதர தொழிலாளர்கள் ஆகியோரின் சிறிய குடியிருப்புகள் இரண்டு தெருக்களிலும் அதிகளவு உள்ளது.
இந்த வார தொடக்கத்தில், இந்தப் பகுதியை ஒட்டி ஓடும் கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால், இங்குள்ள அனைத்து குடியிருப்புகளையும் வெள்ளம் சூழ்ந்தது. தண்ணீர் மிகவும் அழுக்காக இருந்தது, அது என் இடுப்பு வரை வந்தது, என்று ஒரு பெண் கூறினார்.
200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளியேற வேண்டியதாயிற்று. அதே பகுதியில் உள்ள சென்னை பள்ளியில் பலர் தங்க வைக்கப்பட்டனர். இன்று வரை பல குடியிருப்புகளுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதால், விரைவில் வீடு திரும்ப முடியாது என அவர்கள் கூறுகின்றனர்.
மழைக்காலம் நெருங்கும் நேரத்தில் கால்வாயை தூர்வாரினால், இந்த மோசமான சூழ்நிலையில் இருந்து தங்களை காப்பாற்ற முடியும் என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறுகிறார்.
செய்தி மற்றும் புகைப்படம் : இலக்கியா பிரபு
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…
ரோட்டரி சர்வதேச மாவட்டம் 3234, இராணி மேரி கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவிகளுடன் இணைந்து பெரிய அளவிலான…
ஜூலை 2 புதன்கிழமை மாலை புனித தாமஸின் கொடியை பேராயர் ரெவ். ஜார்ஜ் அந்தோணிசாமி ஆசீர்வதித்து, பின்னர் புனித தாமஸின்…