சாந்தோம் அருகே உள்ள ரபேல் பள்ளியில் கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் ஒன்று சேர்ந்து சுடர் என்ற குழுவை உருவாக்கி நடத்தி வருகின்றனர். இந்த குழுவின் மூலம் ஹோம் நர்சிங் படிப்பை நடத்தி வருகின்றனர்.
இந்த படிப்பு மூன்று மாத படிப்பு. முதல் இரண்டு மாதம் வகுப்பறையில் வகுப்புகள் நடைபெறும், அடுத்த ஒரு மாதம் அருகிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பயிற்சி வகுப்பு நடைபெறும்.
முதன் முதலாக இங்கு ஹோம் நர்சிங் படிப்பை முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை இந்த வாரம் நடைபெற்ற நிகழ்ச்சியில் வழங்கினர். இங்கு படித்த ஒரு மாணவிக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் வேலை கிடைத்துள்ளது.
இந்த ஹோம் நரசிங் படிப்பு படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளது. இந்த கொரோனா நேரத்தில் வேலைவாய்ப்பற்ற மகளிர் கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்த படிப்பு இங்கு தொடங்கப்பட்டது. இந்த படிப்பு தற்போது வேலைவாய்ப்பற்ற மகளிர்க்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
நீங்கள் இந்த படிப்பில் சேர்வதற்கும், மேலும் சுடர் குழுவுக்கு உதவிகள் செய்ய விரும்பினால் கீழ்க்காணும் எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
தொலைபேசி எண் : 73053 89425
தபால் நிலைய பயனர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, மயிலாப்பூர் தலைமை தபால் நிலையம் நவம்பர் 2025 இல் ஒரு ஏடிஎம்…
மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் வருடாந்திர தவானோத்சவம் மார்ச் 1 முதல் 3 வரை கொண்டாடப்பட உள்ளது. காலை,…
மயிலாப்பூரில் புதிதாகக் கட்டப்பட்ட திருவள்ளுவர் கோயிலின் பிரமாண்ட கும்பாபிஷேகம் பிப்ரவரி 27 ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.…
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர பங்குனி திருவிழாவின் முதல் படி பிப்ரவரி 26 அன்று நடைபெற உள்ளது. அன்று மாலை…
ஸ்ரீ கபாலீஸ்வர் கோயிலின் புதிய விளக்கு அமைப்பை பிப்ரவரி 15 அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே.…
பிப்ரவரி 19 வியாழக்கிழமை முண்டகக்கண்ணி அம்மன் எம்ஆர்டிஎஸ் ரயில் நிலையத்தில் உள்ள லிஃப்ட் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேலை செய்யவில்லை,…