Categories: சமூகம்

உள்ளூரில் அடிப்படை மருத்துவ சேவைகளை விரும்பும் ஏழைகளுக்காக, மயிலாப்பூர் மண்டலத்தில் நான்கு நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளது

மயிலாப்பூர் மண்டலத்தில் இப்போது குறைந்தது நான்கு நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார மையங்கள் தொடங்கப்பட்டுள்ளளது. மாநில அரசால் நேற்று மாநிலம் முழுவதும் இது தொடங்கப்பட்டது.

இவை அடிப்படையில் பொருளாதார ரீதியாக ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவ கிளினிக்குகள். இவை காலையிலும் மாலையிலும் திறந்திருக்கும்.

நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் இப்போது மந்தவெளியில் (அஞ்சல் அலுவலக வளாகத்திற்குப் பின்புறம்), ஆர் ஏ புரத்தில் (காமராஜ் சாலையில், தர்மாம்பாள் சென்னை கார்ப்பரேஷன் பூங்காவிற்கு எதிரே), சாந்தோமில் (நொச்சிக்குப்பம் அருகே) மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலையில் (பதிவு அலுவலகம் /அம்மா உணவகம் அருகில்) திறக்கப்பட்டுள்ளன.

மயிலாப்பூர் எம்எல்ஏ தா. வேலு, இந்த வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தபோது இந்த மையங்களில் ஒன்றில் இருந்தார்.

ஒவ்வொரு மையத்திலும் இப்போது ஒரு செவிலியர், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு உதவியாளர் உள்ளனர், அடிப்படை மருத்துவ உபகரணங்கள் உள்ளது மற்றும் அடிப்படை மருந்துகள் கையிருப்பு உள்ளது.

இது 12 சேவைகளை வழங்குகிறது, இதில் கர்ப்பகால பரிசோதனைகள், குழந்தை பராமரிப்பு, குடும்ப கட்டுப்பாடு, ENT மற்றும் கண் பரிசோதனை மற்றும் காயம் அல்லது சளி / காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் அவசர தேவைகளை நிவர்த்தி செய்கிறது.

அ.தி.மு.க அரசால் தொடங்கப்பட்ட அம்மா கிளினிக்குகளை விட இந்த மையங்கள் ஒரு படி சிறப்பாக இருக்கும். குறைந்த சேவைகள் மற்றும் பணியாளர்கள் காரணமாக அம்மா கிளினிக்குகள் செயல்படவில்லை.

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலய மகா சம்ப்ரோக்ஷணம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ வேதாந்த தேசிகர் ஆலயத்தின் மகா சம்ப்ரோக்ஷணம் (குடமுழக்கு விழா), திங்கள்கிழமை, மார்ச் 16 அன்று காலை…

8 hours ago

2026 தேர்தல்: பொது இடங்களில் உள்ள அரசு சார்ந்த விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை மறைக்கும் பணியாளர்கள்.

தமிழக சட்டமன்றத் தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மார்ச் 15 மாலை முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அரசு…

1 day ago

தொல்காப்பியப் பூங்காவின் முகத்துவாரப் பகுதி வற்றி வருகிறதா?

தொல்காப்பியப் பூங்காவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள அடையாறு முகத்துவாரம் வற்றி வருகிறது. பூங்காவின் கிழக்குப் பகுதியிலிருந்து, அலைகளின் மூலம் வரும்…

2 days ago

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம்: மார்ச் 16

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலின் மகா சம்ப்ரோக்ஷணம் (கும்பாபிஷேகம்), திங்கட்கிழமை, மார்ச் 16 அன்று காலை 9 மணி முதல்…

4 days ago

இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட அரிசி, அரிசி பொருட்கள் விற்பனை.

மயிலாப்பூர் வாரன் சாலையில் வசிக்கும் அதிதி, 2025 முதல் பாரம்பரிய நெல் வகைகளின் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். அவர் அரிசி…

5 days ago

சட்டம், மேலாண்மை படிப்புகளுக்கான ஆலோசனை.

அபிராமபுரத்தில் அமைந்துள்ள கேரியர் லாஞ்சர் நிறுவனம், மார்ச் 15 ஞாயிற்றுக்கிழமை மதியம் 12:30 மணிக்கு 9, 10 மற்றும் 11…

5 days ago