இந்த நிகழ்வுகளின் சுருக்கமான விவரங்கள் இதோ (மேலும் விவரங்களை www.themadrasday.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்)
பள்ளிகளுக்கான புராஜெக்ட் போட்டி
ஆக.14 திங்கட்கிழமை, 12/14 நகரப் பள்ளிகளைச் சேர்ந்த குழுக்கள் ‘சென்னையின் பழைய வீடுகள்’ என்ற தலைப்பில் பவர்பாயிண்ட் விளக்கக்காட்சிகளை வழங்குகின்றன. குழுக்கள் இரண்டு பழைய வீடுகளைக் கண்டுபிடித்து அவற்றின் அம்சங்களை ஆய்வு செய்ய வேண்டும். காலை 9.30 மணி முதல், நடைபெறும் இடம்: ரானடே நூலகம், சாஸ்திரி ஹால் வளாகம், லஸ். இந்த வருடாந்திர நிகழ்வுக்கு மயிலாப்பூர் டைம்ஸ் மற்றும் சினா ஆதரவு வழங்குகிறது.
குழந்தைகளுக்கான மயிலாப்பூர் கதைகள்
ஆகஸ்ட் 13, ஞாயிற்றுக்கிழமை, அறிஞர்-வரலாற்று ஆய்வாளர் பிரதீப் சக்ரவர்த்தி மயிலாப்பூரின் மையத்தின் வரலாற்றை உயிர்ப்பிக்கும் சில கதைகளை குழந்தைகளுடன் (7, 8 மற்றும் 9 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் பங்கேற்கலாம்) பகிர்ந்து கொள்கிறார். அனுமதி இலவசம். 4.30 மணிக்கு தொடங்குகிறது. ராசி சில்க்ஸ் கடையின் நுழைவாயிலுக்கு வெளியே (சன்னிதி தெரு, மயிலாப்பூர்) ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குள் முடிகிறது.
தொடர் பேச்சுக்கள் (series of talks)
ஆர்கே சென்டர், ஆர். எச். ரோடு, லஸ், சென்னையின் பாரம்பரியம், ஆளுமைகள், முக்கிய நிகழ்வுகளை மையமாகக் கொண்ட தொடர் பேச்சுக்களை நடத்துகிறது.
சில பேச்சுக்கள்:
ஆகஸ்ட் .15, மாலை 6.45 மணிக்கு: பிரபல நடிகர் என்.எஸ்.கிருஷ்ணன் பற்றிய பேச்சு – வெங்கடேஷ் ராமகிருஷ்ணன் பேச்சு.
ஆகஸ்ட் 16, 5.30 மணிக்கு: ‘சென்னையில் எழுத்தாளர் சூடாமணி’ – பிரபா ஸ்ரீதேவன் பேச்சு.
ஆகஸ்ட் 17, மாலை 5.30 மணிக்கு: ‘சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கோவில்கள் – சித்ரா மாதவன் பேச்சு. அனைவரும் வரலாம்.
நகரப் பள்ளிகளுக்கு தமிழில் மெட்ராஸ் வினாடி வினா
இந்த வருடாந்திர வினாடி வினா, நகரத் தமிழ் நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த அணிகளுக்குத் திறந்திருக்கும். இருவர் கொண்ட அணிகள் பங்கேற்கலாம். வினாடி வினாவை மயிலாப்பூர் டைம்ஸ் மற்றும் சினா ஆதரவுடன் ஆர். ரேவதி நடத்துகிறார். மதியம் 3 மணிக்கு லஸ்ஸில் உள்ள ரானடே நூலகத்தில் தொடங்குகிறது. விவரங்களுக்கு 24982244 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…
E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…
மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…
இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…
இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…