மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தற்போது மூன்று முக்கிய விஷயங்களுக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார். அதில் ஒன்று சாந்தோம் பகுதியில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து புதுபிப்பது. டூமிங்க் குப்பம் பகுதியில் உள்ள பழமையான கட்டிடங்களை இடித்து கட்ட திட்டங்கள் வகுக்கும் போது சில பிரச்சனைகள் வந்ததாக தெரிவித்துள்ளார். குடிசை மாற்று வாரியம் வீடுகளை இடிக்கும் போது அங்கு வசித்து வரும் மக்களுக்கு வீடுகள் கொடுப்பது மற்றும் அங்கு ஆக்கிரமித்து கட்டியிருக்கும் வீடுகளில் குடியிருப்பவர்களுக்கு வீடுகள் வழங்குவது போன்றவற்றில் பிரச்சனைகள் வந்ததாகவும் பின்னர் அவர்களுக்கும் வீடுகள் வழங்க குடிசைமாற்று வாரியம் ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்தார். ஆனால் இவர்கள் அனைவருக்கும் ஒரே இடத்தில் வீடுகள் வழங்க சுமார் பதினான்கு மாடி கட்டிடம் கட்ட வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் பதினான்கு மாடி கட்டிடம் கட்டினால் தானியங்கி இயந்திர பிரச்சனை மற்றும் இதுபோன்று வேறு சில பிரச்சனைகள் வரும் என்று மக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக விரைவில் தீர்வு காணப்பட்டு பணிகள் தொடங்க ஏற்பாடு செய்யப்படும் என்று எம்.எல்.ஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக மயிலாப்பூர் பகுதியில் உள்ள அனைத்து கோவில்களிலும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும், பக்கதர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க இந்து அறநிலையத்துறை அமைச்சரிடம் பேசி பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது பீமனப்பேட்டையிலுள்ள சென்னை மாநகராட்சியின் மேல்நிலைப்பள்ளியில் வகுப்பறைகள் மற்றும் அனைத்து வசதிகள் இருந்தாலும் இங்கு கல்வி பயில வரும் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. ஆகவே இங்கு முதலில் மாணவர் சேர்க்கைக்கான வேலைகளை செய்யவும். மற்றும் ஆரம்ப கல்வி பயில தேவையான அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…
ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…
மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…
இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…
சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…
புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…