மயிலாப்பூர் இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் உள்ள சமூக சேவை செய்யும் தொண்டு நிறுவனமான விஷ்வஜெயம் பவுண்டேஷனுக்கு சமீபத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. கடந்த வருடம் கொரோனா நேரத்தில் இவர்கள் இரண்டு மருத்துவமனைகளில் நிறைய உதவிகளை செய்துள்ளனர்.
இவர்களின் சேவையை பாராட்டி இந்த குழுவுக்கு குழந்தைகள் சுகாதார நிறுவனத்தின் இயக்குநரும் பேராசிரியருமான டாக்டர் எஸ்.எழிலரசி பாராட்டு சான்றிதழ் வழங்கியுள்ளார்.
இந்த குழு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையிலும் மற்றும் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் பொதுமக்களுக்கு தினமும் உணவளித்து வந்தனர். மேலும் விஷ்வஜெயம் பவுண்டேஷன் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் சேகர் விஸ்வநாதன், கடந்த வருடம் சுமார் ஒரு லட்சம் உண்வு பொட்டலங்கள் மக்களுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் விவரங்களுக்கு விஷ்வஜெயம் பவுண்டேஷனை தொடர்புகொள்ள தொலைபேசி எண்: 93800 22773.
மயிலாப்பூர், கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையத்தில் பிப்ரவரி 21 அன்று ஒரு பரபரப்பு ஏற்பட்டது; இங்குள்ள ஊழியர்கள்…
ஆர்.ஏ.புரத்தில் உள்ள கபாலீஸ்வரர் - கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் கடந்த வாரம் 30 ஜோடிகளுக்கு திருமண ஏற்பாடுகளை தமிழக இந்து…
சென்னை மெட்ரோ தொடர்பான பணிகளுக்காக மயிலாப்பூர் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் சிறிய மாற்றங்கள் தொடர்ந்து செய்யப்படுகின்றன. சமீபத்தில், சமஸ்கிருதக் கல்லூரிக்கு வெளியே…
மயிலாப்பூரில் இந்த வார இறுதியில் சிட்டி சென்டர் மாலில் நீங்கள் இருந்தால், இந்த ஷாப்பிங் மாலின் தரை தளத்தில் நடைபெறும்…
மயிலாப்பூரில் பிப்ரவரி 10 அன்று நடைபெற்ற ஸ்ரீ காஞ்சி மகா பெரியவா ஆலயத்தின் மஹாகும்பாபிஷேகம், ஒரு அறக்கட்டளை, அதன் ஆதரவாளர்கள்…
மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் தைப்பூச விழாவிற்கான தெப்பம் அமைக்கும் பணி வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை தொடங்கியது. டஜன்…