அடையாறு பூங்காவில் இருந்து காந்தி சிலை வரை மற்றும் வடக்கே காமராஜர் சாலை (கடற்கரை சாலை) வரை உள்ள சாலையை பார்த்தபோது உண்மையில் இங்கு பலத்த மழை பெய்திருக்கிறதா என்று ஆச்சரியப்படும் வகையில் சாலை சுத்தமாக இருந்தது.
ஒரு சில குட்டைகளில் மட்டுமே தண்ணீரை பார்க்க முடிந்தது. சாந்தோம் நெடுஞ்சாலை எப்போது மழை பொழிந்தாலும் வெள்ளத்தில் மூழ்கும்.
சென்னை மாநகராட்சி மேற்கொண்ட வடிகால் திட்ட பணிகளால் இங்கு தண்ணீர் தேங்காமல் இருந்தது. இந்த பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை, பட்டினப்பாக்கம் சந்திப்பிலிருந்து தென்பகுதியில் வேலைகள் நடந்து வருகிறது.
ஆனால், வடசென்னை பகுதிக்கு நீதிபதிகளும், அமைச்சர்களும் வேலைக்குச் செல்லும் இந்த பரபரப்பான சாலையில் வெள்ளநீர் தென்படவில்லை.
மாதா சர்ச் சாலையில் மழை பொழிந்தபோது பிரதான சாலையில் தண்ணீர் நிரம்பியதாகவும், ஆனால் பின்னர் அகற்றப்பட்டதாகவும் மக்கள் தெரிவித்தனர்.
மேலே உள்ள படம் அக்டோபர் 2021 இல் அடையாறு பூங்காவின் அருகே பணியாளர்கள் பணிபுரிந்த போது எடுக்கப்பட்ட புகைப்படம்.
<< நீங்கள் மழை நேரத்தில் சந்தோம் நெடுஞ்சாலையை பார்த்திருந்தால் உங்களது கருத்துக்களை இங்கே பகிர்ந்து கொள்ளவும் >>
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…
மயிலாப்பூர் எம்.எல்.ஏ. தா. வேலு, விளம்பரதாரர்களால் மோசமாக ஏமாற்றப்பட்டதாகக் கூறும் மயிலாப்பூர் நிதியின் வைப்பாளர்கள் தங்கள் வழக்கை முதல்வர் அல்லது…
பாரதிய வித்யா பவனின் சென்னை கேந்திரா, நவம்பர் 20 முதல் அதன் வருடாந்திர மார்கழி இசை நிகழ்ச்சிகளை நடத்துகிறது, மேலும்…
மயிலாப்பூர் ஸ்ரீ வாலீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் நவம்பர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு கோயிலை…