Categories: ருசி

பாலக்காடு இலை சாப்பாடு. இப்போது ஆர்டர்கள் எடுக்கப்படுகின்றது.

இசையமைப்பாளர் முரளிகிருஷ்ணனின் முயற்சியான சபாஷ் கேண்டீன் டிசம்பர் சீசனுக்காக சிறப்பு இலை சாப்பாட்டை ஏற்பாடு செய்துள்ளது.

கல்யாண சாப்பாடு மூன்று நாட்களில் வழங்கப்படுகிறது மற்றும் இறுதிச் சலுகை டிசம்பர் 17 ஆகும். பாலக்காட்டைச் சேர்ந்த நிபுணர் சமையல் கலைஞர்கள் உணவை தயாரித்து வழங்குவார்கள்.

ஒரு சாப்பாடு விலை ரூ.300.

நீங்கள் உணவை முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும். ஆழ்வார்பேட்டை, மயிலாப்பூர் மற்றும் ஆர்.ஏ.புரம் பகுதிகளுக்கு அனுப்பப்படும் 10 மற்றும் அதற்கு மேற்பட்ட உணவுகளுக்கு இலவச டெலிவரி உண்டு. மற்றவர்கள் நேரில் வந்து எடுத்து செல்ல வேண்டும். அல்லது டன்சோவில் ஆர்டர் செய்யலாம். டெலிவரி கட்டணங்கள் உண்டு.

பிக் அப் இடம் – சீசன்ஸ் 4 குடியிருப்பு, கே பி தாசன் சாலை, தேனாம்பேட்டை.

முன் பதிவுகளுக்கு 9789933673 என்ற எண்ணிற்கு அழைக்கவும்.

https://www.mdnd.in/season_ticket/mutipleSeason/OTkjMzUjMTAx என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.

டிசம்பர் 17, ஞாயிற்றுக்கிழமை, இடிச்சுப் புழுஞ்சா பாயசம், வாழைப்பூ வடை, வெண்டக்காய் தயிர் பச்சடி, குடைமிளகாய் உசிலி, அரச்சி விட்ட வதக்குழம்பு, பைன் ஆப்பிள் ரசம், வடை, சௌ சௌ கூட்டு , செப்பன் வறுவல், சாதம் மற்றும் பருப்பு ஆகியவை அடங்கும்.

செய்தி: வி சௌந்தரராணி
புகைப்படம்: பரிமாறப்பட்ட சாப்பாடு அல்ல, பிரதிநிதித்துவத்திற்காக மட்டுமேவெளியிடப்பட்டுள்ளது.

admin

Recent Posts

மயிலாப்பூரில் கணிசமான மழை பெய்துள்ளது. மின்னல் காரணமாக சில வீட்டு உரிமையாளர்களின் மின் சாதனங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கின்றனர்

மயிலாப்பூரில் செப்டம்பர் 16 அதிகாலையில் கணிசமான அளவு மழை இடி மின்னலுடன் பெய்தது. இதன் காரணமாக சில வீட்டு உரிமையாளர்கள்…

9 hours ago

நவராத்திரிக்கு இரண்டு போட்டிகளை மயிலாப்பூர் டைம்ஸ் நடத்துகிறது. ஒன்று மாணவர்களுக்கானது, மற்றொன்று குடும்பங்களுக்கானது.

மயிலாப்பூர் டைம்ஸ் நவராத்திரிக்கு இரண்டு போட்டிகளை அறிவித்துள்ளது. ஒன்று சிறப்பு கவனத்தை ஈர்க்கிறது. மூன்று நாட்களில், வண்ணமயமாக்கல் போட்டிக்கான 35…

9 hours ago

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

3 weeks ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

2 months ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago