மயிலாப்பூரில் உள்ள ஆர்.ஆர்.சபாவில் காலை 6.30 மணி அளவில் பக்தி இசை, ஸ்ரீராம பஜனம் மற்றும் ஆச்சாரியர்களின் சொற்பொழிவுகள் நடந்தன.
எல்டாம்ஸ் சாலை வளாகத்தில் தி குரோவ் பள்ளியில், ராமர் மற்றும் சீதையின் உருவங்களைச் சுற்றி மாணவர்களின் இசை மற்றும் பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
மாத பெருமாள் கோவில் அருகில் இருக்கும் மாதவன் நிவாஸ் கட்டிடத்தில் வசிக்கும் அனைவரும் இவ்விழாவை சிறப்பாக கொண்டாடினர். அயோத்தி கோயிலின் குடமுழக்கின் போது நேரலை காட்சியை கண்டு களித்து ஒன்று கூடி ராமருக்கு பூஜை பஜனைகள் செய்து ஸ்ரீ ராமபிரான் வருகையை சிறப்பித்தனர். மேலும் பள்ளி குழந்தைகளும் சுற்றியுள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர், வந்தவர்களுக்கு தயிர் சாதம் , புளியோதரை போன்ற பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
ஆர் ஏ புரத்தில் உள்ள ஸ்ரீ கற்பக விநாயகர் கோவிலில் காலை 6.30 மணியளவில் அபிஷேகம் தொடங்கி வேதபாராயணம் மற்றும் விஷ்ணு சஹஸ்ரநாமம் ஓதப்பட்டது.
ஆர் ஏ புரம் பக்த ஜன சங்கம் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது.
மாலையில், லஸ்ஸில் உள்ள ஆர்கே சென்டரில், அறிஞர் டாக்டர் சுதா சேஷய்யன் உரை நிகழ்த்தினார், அதைத் தொடர்ந்து பாடகர் பால்காட் ராம்பிரசாத்தின் பாரம்பரிய இசைக் கச்சேரி நடந்தது.
உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…