Categories: சமூகம்

மயிலாப்பூரில் பழைய குடியிருப்புகளை மீண்டும் புதிதாக உருவாக்கி, குடியிருப்பாளர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவருக்கும் குடியிருப்புகளை வழங்குவது பெரும் சவாலாக உள்ளது

அரசால் கட்டப்பட்ட குடியிருப்புகளின் வளாகங்களில் வசிக்கும் 50 சதவீதத்திற்க்கும் அதிகமானோர், இந்த வளாகங்களில் உள்ள பாதைகள் மற்றும் இடங்களை ஆக்கிரமித்து குடியிருப்புகளை அமைத்து குடியிருந்துவந்தனர். தற்போது இவர்களுக்கு வீடுகள் வழங்குவது பெரும் சவாலான காரியமாக உள்ளது?.

மயிலாப்பூரில் பல திட்டங்களில் பணிபுரியும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூத்த அதிகாரிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவாலாகும் இது. மேலும் அதிகாரிகள் இது சம்பந்தமாக உள்ளூர் எம்.எல்.ஏ விடம் சில சமாதான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

மயிலாப்பூர் தொகுதியில் சுமார் 24 குடியிருப்பு வளாகங்கள் உள்ளதாகக் கூறப்படுகிறது, அதில் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் ஏழைகளுக்கு சிறிய வீடுகளை உருவாக்கியது.

ஏறக்குறைய அனைத்து குடியிருப்புகளும் பழுதடைந்து வருகின்றன; சில இடங்களில், கூரைகள் அல்லது ஜன்னல்கள் இடிந்து விழுந்துள்ளன.

குடியிருப்பாளர்கள் பெரும்பாலும் வீட்டின் உட்புறங்களை மட்டுமே சரிசெய்கின்றனர். இப்போதுதான் இதுபோன்ற பராமரிப்பு பணிகளை கையாள, குடியிருப்பாளர்கள் நலச் சங்கங்களை அமைப்பதற்கான வழிமுறையை உருவாக்கியுள்ளனர்.

சில வளாகங்களில், மெரினா குப்பம் பகுதியில், மறுவடிவமைப்பு பணிகள் சீராக உள்ளன. டூமிங்குப்பத்தில் வசிக்கும் 200 பேரில் 70சதவீதம் பேர் சமீபத்தில் புதிய அடுக்குமாடி குடியிருப்பில் குடியேறியதாக மயிலாப்பூர் எம்.எல்.ஏ.தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 214 குடியிருப்புகள் ஒதுக்கப்பட உள்ளது. “அவர்களின் ஆவணங்களை சரிபார்த்து அவர்களுக்கு வீடுகளை ஒதுக்க சிறிது காலங்கள் ஆகும்.

ராஜீவ்காந்தி குப்பம் மற்றும் சீனிவாசபுரத்தில் கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. இங்குள்ள சட்டப்பூர்வ குடியிருப்பாளர்களைக் காட்டிலும் அதிகமான குடிசைகள் அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை எங்களால் பார்க்க முடிகிறது, மேலும் அனைவருக்கும் வீடு கட்டித் தருவதாக நாங்கள் உறுதியளித்துள்ளதால், அவர்களுக்கு இடமளிப்பது இப்போது சவாலாக உள்ளது.

அனைவருக்கும் இடமளிக்கும் வகையில், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட நிலப்பரப்பில் உயரமான குடியிருப்புகள் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு தளத்திலும் 3/4 லிஃப்ட்கள் இருக்கும் வகையில் 10/12 மாடிகள் இருக்கலாம். சில குடியிருப்பாளர்கள் இந்த திட்டத்தை எதிர்த்துள்ளனர், லிஃப்ட் செயலிழந்தால் அல்லது மின்சார பழுது ஏற்பட்டால் குடியிருப்பாளர்கள் கீழே இறங்குவதற்கு மிகுந்த சிரமங்கள் ஏற்படும்.

அனைவருக்கும் இடமளிக்கும் வாரியத்தின் திட்டங்களை குடியிருப்பாளர்களுக்குக் காட்டுகிறோம், அவர்களுக்கு ஆட்சேபனை இருந்தால், அவர்கள் சார்பில் சமூக தலைவர்கள் எங்களிடம் விவாதித்து முடிவெடுக்கலாம். இது தவிர வேறு வழியில்லை. இதனால் கபாலி தோட்டம் போன்ற பல இடங்களில் பணி தாமதமானது. என்று எம்.எல்.ஏ தா.வேலு கூறுகிறார்

விசாலாட்சி தோட்டம், வன்னியம்பதி தோட்டம், வள்ளீஸ்வரன் தோட்டம் ஆகிய இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆர்.ஏ.புரத்தில் ஒரு பிளாட் ஒதுக்கப்பட்ட குடியிருப்பாளர் ஒருவர் கூறுகையில், தற்போது நல்ல நிலையில் நடைபெற்று வந்த பணி கொரோனா காரணமாக தற்போது பணிகள் மந்தகதியில் உள்ளது.

குயில் தோட்டத்தில், சாந்தோம் ஹைரோட்டில் உள்ள மக்கள் எங்கள் முன்மொழிவுகளை ஏற்று தங்கள் இடத்தை காலி செய்யத் தொடங்கியுள்ளனர் என்று எம்எல்ஏ கூறுகிறார்.

பல்லக்குமாணியம் நகர், பிள்ளையார்கோயில் தோட்டம், சத்தியவாணி முத்து நகர், நாட்டான் தோட்டம், பள்ளிவாசல் தெரு, குப்பைமேடு, ஆதிமான் தோட்டம் ஆகிய பகுதிகளிலும் திட்டப்பணிகள் கோடிட்டு காட்டப்பட்டுள்ளன.

admin

Recent Posts

ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறப்பு. டோர் டெலிவரி வசதி உண்டு.

மந்தைவெளி தபால் நிலையத்திற்கு அருகிலுள்ள ஆர். கே. மட சாலையில் அப்பல்லோ மருந்தகம் திறக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய விசாலமான மருந்தகத்தில்…

2 weeks ago

ஆழ்வார்பேட்டை கடையில் கைவினைப் பொருட்கள் விற்பனை. அக்டோபர் 19 வரை.

‘கலா உத்சவ்’ என்பது அக்டோபர் 19 வரை ஆழ்வார்பேட்டை கடையில் நடைபெறும் கைவினைக் கண்காட்சி மற்றும் விற்பனை ஆகும். இது…

2 weeks ago

மாணவர்களுக்கு மடிக்கணினிகளை நன்கொடையாக வழங்கிய ஆர்.ஏ.புரம் சமூகத்தினர்.

ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் சங்கம் (RAPRA) சில ஆண்டுகளாக இந்த சுற்றுப்புறத்தில் உள்ள சென்னை பள்ளிகள் மற்றும் அரசு உதவி…

2 weeks ago

மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி. காந்தியின் படைப்புகள் பற்றிய கருப்பொருள். தமிழில்.

ஆழ்வார்பேட்டை காந்தி அமைதி அறக்கட்டளை தனது அலுவலக வளாகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி (மகாத்மா காந்தியின் 156-ஆம் ஜெயந்தியை…

4 weeks ago

நவராத்திரி 2025: ஸ்ரீ கபாலீஸ்வரர் கற்பகாம்பாள் கல்யாண மண்டபத்தில் பிரமாண்டமான கொலு

இந்து சமய அறநிலையத்துறை விவகாரங்களுக்கான மாநில அமைச்சர் பி.கே. சேகர் பாபு, செப்டம்பர் 22 மாலை மயிலாப்பூர் வெங்கடேச அக்ரஹாரத்…

4 weeks ago

வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகத்தில் தீபாவளி லேகியம் விற்பனைக்கு தயார்.

தீபாவளி லேகியம் வாங்க இடம் தேடுகிறீர்களா? அதற்கு ஒரு சிறந்த இடம் மயிலாப்பூரில் உள்ள வெங்கட்ரமணா ஆயுர்வேத மருந்தகம். இது…

4 weeks ago