செய்திகள்

மயிலாப்பூரில் பள்ளிகள் மீண்டும் திறப்பு

தமிழக அரசின் ஆணைப்படி நேற்று செப்டம்பர் 1ம் தேதி முதல் மயிலாப்பூரில் உள்ள பள்ளிகளில் 9ம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரை உள்ள சீனியர் மாணவர்களுக்கு வகுப்புகள் மீண்டும் தொடங்கப்பட்டது.

கடந்த ஒரு வருடங்களாக மாணவர்கள் பள்ளிக்கு வராத நிலையில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. மயிலாப்பூர் லேடி சிவசாமி அய்யர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் பள்ளி வேலை நேரம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே வந்திருந்தனர். பள்ளிக்கு வரும் மாணவிகள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

முகக்கவசம் அணிந்து வராத மாணவிகளுக்கு முகக்கவசம் வழங்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவர்கள் அனைவருக்கும் உடல்வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரையும் தனித்தனியே சமூக இடைவெளியை பின்பற்றி அமரவைக்கப்பட்டனர்.

ஆர் ஏ புரத்திலுள்ள இராணி மெய்யம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு உடல் வெப்ப பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. வகுப்பறையில் உள்ள மேசைகள் இடைவெளி விட்டு போடப்பட்டிருந்தது. அந்த மேசைகளில் மாணவிகள் அமரவைக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இது போன்று சாவித்திரியம்மாள் ஓரியண்டல் மேல்நிலைப்பள்ளியிலும் வகுப்புகள் தொடங்கப்பட்டது. இங்கு பள்ளி மாணவிகளின் பேண்டு இசை நிகழ்சியுடன் மாணவிகளை பள்ளிக்கு வரவேற்றனர். மாணவிகள் ஆசிரியர்களுக்கு பூச்செண்டு வழங்கினர்.

மயிலாப்பூர் ஆர்.கே. மட சாலையில் உள்ள பி.எஸ். மேல்நிலைப்பள்ளியிலும் சீனியர் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டது. இங்கு மாணவர்களிடையே கொரோனா சம்பந்தமாக விழிப்பிணர்வு இருப்பதாக தலைமை ஆசிரியர் கலா தெரிவித்துள்ளார். மேலும் வகுப்பறையில் முகக்கவசம் அணிந்து பாடம் எடுக்க சிரமம் ஏற்பட்டால், திறந்த வெளியில் மரத்தடியில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

admin

Recent Posts

கல்வி வாரு தெருவில் இந்த அரைகுறை சாக்கடை மேன்ஹோல் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.

கல்வி வாரு தெரு, வித்யா மந்திர் பள்ளி வாசலை ஒட்டிய தெரு, பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிய தெரு போன்ற இடங்களில்…

4 hours ago

அடையாறு ஆற்றில் நீர்தாமரைகள்: படகு கிளப்பில் படகோட்டிகள் ஏமாற்றம்.

படகு கிளப்பின் கரையை சுற்றியுள்ள அடையாறு ஆற்றில் உள்ள நீர்தாமரைகள் மற்றும் செடிகள் படர்ந்துள்ளன. இது கிளப்பில் படகோட்டுபவர்களை விரக்தியில்…

6 hours ago

கற்பகம் அவென்யூ பூங்காவில் நாய்க்குட்டிகள் காணப்படுகின்றன. அவர்களை யாராவது தத்தெடுக்கலாம்.

ஆர்.ஏ.புரத்தின் கற்பகம் அவென்யூ மண்டலத்தில் உள்ள ஜி.சி.சி பூங்காவில் ஒன்றிரண்டு நாய்க்குட்டிகள் காணப்பட்டன. மூன்று நாட்களுக்கு முன்பு பூங்காவிற்குச் சென்ற…

6 hours ago

மயிலாப்பூர் ஆர்.கே.மட சாலையில் நேச்சுரல் சலூன் திறப்பு.

ஸ்பா தெரபி முதல் ஹேர் ஸ்டைலிங் சேவைகள் வரை, இந்த நன்கு வடிவமைக்கப்பட்ட சலூன் அனைத்தையும் வழங்குகிறது. இதன் உரிமையாளர்…

1 day ago

ஆழ்வார்பேட்டை ரவுண்டானாவில் புதிய காபி மற்றும் சிற்றுண்டி கடை

மெட்ராஸ் காபி ஹவுஸ் முசிறி சுப்ரமணியம் சாலையில் (ஒரு காலத்தில் ஆலிவர் சாலை என்று அழைக்கப்பட்டது) ஆழ்வார்பேட்டை ஸ்ரீ ஆஞ்சநேயர்…

2 days ago

சிஐடி காலனியில் உள்ள இந்த பள்ளியில் ப்ரீகேஜி மாணவர் சேர்க்கை தொடங்கியது.

உமா நாராயணன் நடத்தும் சிஐடி காலனியில் உள்ள தி நெஸ்ட் பள்ளியில் ப்ரீ கேஜி வகுப்புகளுக்கான சேர்க்கை இப்போது திறக்கப்பட்டுள்ளது.…

2 days ago