ஆழ்வார்பேட்டையில் உள்ள சென்னை மாநகராட்சி வளாகத்தில் விதிமுறைகளை மீறிய ஒப்பந்ததாரர் மீது குடியிருப்புவாசிகள் அதிருப்தி.

சென்னை மாநகராட்சிக்கான புதிய சமுதாய கூடத்தை, ஜி.சி.சி.யின் சொத்தில் சி.பி.ராமசாமி சாலையில் கட்டும் சிவில் ஒப்பந்ததாரரின் கட்டிட விதிமீறல்களால் டாக்டர் ரங்கா சாலையில் வசிப்பவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஒப்பந்ததாரர் கட்டிட விதிகளை மீறி, கட்டுமான தளத்தை அனைத்து பக்கங்களிலும் ஏசிபி ஷீட்கள் மூலம் மூடி மறைக்காமல், அமைத்து வருவதாக கூறுகின்றனர்.

இந்த தளத்தின் இருபுறமும், சென்னை மாநகராட்சி கட்டிடங்கள் உள்ளன – ஒருபுறம் எம்எல்ஏ மற்றும் கவுன்சிலர் அலுவலகங்கள் மற்றும் ஜிசிசி அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகம் உள்ள வளாகம் உள்ளது. மறுபுறம், சமீபத்தில் கட்டப்பட்ட மருத்துவமனை.

பின்பகுதியில் (புளோட்டின் கிழக்குப் பக்கம்) குடியிருப்புகள் உள்ளதாகவும், கடந்த 6 மாதங்களாக இந்த இடத்தில் ஏசிபி ஷீட்கள் போடப்படாததால், சத்தம் மற்றும் தூசி மாசு ஏற்படுவதாக இங்கு வசிப்பவர்கள் கூறுகின்றனர்.

ஜி.சி.சி இணையதளத்தில் ஆகஸ்ட் மாதம் அதிகாரப்பூர்வ புகார் அளித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் உள்ளூர் அதிகாரிகளை தொடர்பு கொண்டும் எந்த பயனும் இல்லை என்று பெயர் சொல்ல விரும்பாத குடியிருப்பாளர் ஒருவர் கூறுகிறார்.

அவர்கள் இப்போது மயிலாப்பூர் எம்.எல்.ஏ., தா.வேலு அவர்கள் ஒப்பந்தக்காரர் விதிகளை மதித்து வேலைகளை செய்ய அறிவுறுத்த , வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர்.

கட்டுமான தளத்தை மறைக்காத தனியார் கட்டிடங்களுக்கு ஜி.சி.சி விரைவாக அபராதம் விதிப்பதும், பொது கட்டிடம் கட்டும் தளங்களுக்கு கண்மூடித்தனமாக இருப்பதும் முரண்பாடானது. என்று மற்றொரு குடியிருப்பாளர் கூறினார்,

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago