குடிமை பிரச்சனைகளை பார்க்கவும் மற்றும் தீர்க்கவும் பொறியாளர்கள் மற்றும் குடியிருப்பாளர்களுடன் சேர்ந்து ஜெத் நகரில் நடைபயணம் மேற்கொண்ட கவுன்சிலர்.

கடந்த வார இறுதியில், வார்டு 126 இன் கவுன்சிலர் அமிர்தவர்ஷினி தலைமையில் உள்ளூர் குடிமைப் பிரச்சினைகளைப் புரிந்துகொள்வதற்காக வார்டின் ஜெத் நகர் முழுவதும் காலை நடைபயணம் மேற்கொண்டார். அவருடன் உள்ளூர் அரசாங்க நிறுவனங்களின் ஊழியர்களும் குடியிருப்பாளர்களும் சேர்ந்து சென்றனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் சில முக்கியப் பிரச்னைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன, அவை –

பல்வேறு தேவைகளுக்காக உள்ளூர் பகுதி ரோடுகள் தோண்டப்பட்டு, கடந்த ஒரு மாதமாக ‘தவணை’ முறையில் இப்பணி நடக்கிறது.

அவென்யூ மரங்கள் தெரு விளக்குகள் மற்றும் சிசிடிவி கேமராக்களை மறைப்பதால், ஜி.சி.சி.யால் வெட்டப்பட வேண்டும்.

சமீப காலமாக காலனிக்குள் மெட்ரோ வாட்டர் வரத்து மிகவும் மோசமாக உள்ளது.

தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

ஜெத்நகரில் சாலை அமைப்பதற்கான பட்ஜெட் ஒப்புதல்களை பகிர்ந்து கொள்ளுமாறு குடியிருப்பாளர்கள் கவுன்சிலரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். ஜெத் நகர் சங்க உறுப்பினர் ரவி நந்தியாலா கூறுகையில், “முக்கிய பிரச்சனைகள் குறித்து சமூக சங்கம் மூத்த அதிகாரிகள் / பொறியாளர்களுக்கு கடிதம் எழுதியும் எந்த பதிலும் இல்லை” என்றார்.

இந்த ‘நடைபயணத்தில்’ அரசு முகமை ஊழியர்களான ஜி.சி.சி., ஏ.இ.இ., முத்தையா,உர்பேசர் மேற்பார்வையாளர் பூபாலன், ஏ.இ., கோபி. ஆகியோர் இருந்தனர்.

admin

Recent Posts

ஆர்.ஏ. புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான இடத்தில் 300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமையவுள்ளது.

ஆர்.ஏ. புரத்தில் ஆந்திர மகிளா சபாவுக்குச் சொந்தமான பரந்த நிலப்பகுதியின் பெரும்பகுதி சமப்படுத்தப்பட்டு, புதிய மருத்துவமனை ஒன்றை அமைப்பதற்கான பணிகள்…

2 months ago

மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வாராந்திர குறைகேட்புக் கூட்டம் தொடங்கியது

E1 மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று வாராந்திர குறைகேட்புக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மற்றும்…

2 months ago

மெரினாவில் மற்றொரு ‘ப்ளூ ஃபிளாக்’ (Blue Flag) பகுதி – கலங்கரை விளக்கத்திற்கு அருகில்

மெரினா கடற்கரையில் மற்றொரு 'ப்ளூ ஃபிளாக்' பகுதிக்கான இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது கலங்கரை விளக்கத்திற்கு அருகிலும், காமராஜர்…

3 months ago

மயிலாப்பூர் எம்.எல்.ஏ-வை மயிலாப்பூர் மக்கள் தொடர்புகொள்ள தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி அறிமுகம்.

மயிலாப்பூர் எம்.எல்.ஏ.-வும் மாநில அமைச்சருமான பி. வெங்கடரமணன், ஆழ்வார்பேட்டையில் தனது அலுவலகத்தைத் திறந்ததிலிருந்து, அப்பகுதி மக்கள், சமூகத் தலைவர்கள் மற்றும்…

3 months ago

சாய்பாபா கோயில் அருகே ECR-லிருந்து கொண்டுவரப்பட்ட நுங்குகள் விற்பனை

இந்த கடும் கோடைக்காலத்தில் சுவையான நுங்குகளை வாங்கிச் சுவையுங்கள். சாய்பாபா கோயில் அருகிலுள்ள வெங்கடேச அக்ரஹாரம் தெருவில், ரவி மற்றும்…

3 months ago

இராணி மேரி கல்லூரியில் சேர்க்கை இன்னும் நடைபெறுகிறது.

இராணி மேரி கல்லூரியில் சேர விரும்புவோர் இப்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசித் தேதியைத் தவறவிட்டவர்கள் www.tngasa.in என்ற இணையதளத்தின்…

3 months ago