ரூ.2,000 நோட்டுகளை மாற்ற உள்ளூர் பகுதியில் உள்ள வங்கிகளில் கூட்டம் இல்லை.

மயிலாப்பூரில் உள்ள உள்ளூர் வங்கிக் கிளைகளில் ரூ.2,000 ரூபாய் நோட்டுகளை மாற்ற மக்கள் கூட்டம் பெரிய அளவில் இல்லை.

ரூபாய் 2000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என்ற மத்திய வங்கி அறிவித்திருந்தது. இதனையடுத்து ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்ததாஸ் நோட்டுகளை வங்கி கிளைகளில் கொடுத்து மாற்றி கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.

மேலும், கிளைகளில் கூட்ட நெரிசலை எதிர்பார்க்கவில்லை என்றும், மக்கள் வங்கிகளுக்கு விரைந்து செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டார்.

எந்த வங்கியிலும் நோட்டுகளை மாற்ற செப்டம்பர் 30 வரை அவகாசம் உள்ளதால், செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

புதன்கிழமை, லஸ் சர்ச் சாலையில் உள்ள அம்ருதாஞ்சன் அருகே உள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளையில், இந்த பரிமாற்றத்திற்காக ஒரு கவுன்டர் அமைக்கப்பட்டிருந்தது, ஆனால் மதிய நேரத்தில் கவுண்டரில் பலர் இல்லை.

இதே நிலைதான் வடக்கு மாட வீதியில் உள்ள இந்தியன் வங்கியின் கிளையிலும் பரிமாற்ற நோக்கத்திற்காக சிறப்பு கவுன்டர் ஏதும் இங்கு இல்லை.

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

2 days ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

1 month ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago