மத நிகழ்வுகள்

சிவராத்திரி விழா: இந்து சமய அறநிலையத்துறை பி.எஸ். பள்ளி மைதானத்தில் பெரிய கலாச்சார நிகழ்ச்சியை நடத்த திட்டம்.

இந்து சமய அறநிலையத்துறை மற்றும் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் உள்ள குழுவினர் மார்ச் 1 ஆம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு பி.எஸ். பள்ளி விளையாட்டு மைதானத்தில் பன்னிரெண்டு மணிநேர கலாச்சார நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

மாலை 6 மணிக்கு தொடங்கி இரவு முழுவதும் ஓதுவார்கள் உட்பட பல கலைஞர்கள் நிகழ்ச்சிகளை வழங்கும் வகையில் பெரிய மேடை அமைக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த நாள் காலை செவ்வாய்கிழமை, மார்ச் 1ம் தேதி காலை 6 மணி வரை நடைபெறும்.

இன்று காலை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, துறை அதிகாரிகள், எம்.எல்.ஏ மற்றும் கோவில் குழுவுடன் விளையாட்டு மைதானத்தில் நிகழ்ச்சிகளை நடத்துவது பற்றி விவாதித்தார்.

கோயில் வளாகத்திற்கு வெளியே இதுபோன்ற மெகா நிகழ்வு நடத்தப்படுவது இதுவே முதல் முறை என்று கோயில் வட்டாரங்கள் மயிலாப்பூர் டைம்ஸிடம் தெரிவித்தன.

சுமார் 2000 பேர் அமரும் வகையில் இருக்கைகள், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதி, மொபைல் கழிப்பறைகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யப்படும். இரவு முழுவதும் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.

மாலை 6 மணிக்கு ஸ்ரீ கபாலீஸ்வர் கோவிலின் ஆஸ்தான வித்வான் மோகன்தாஸின் நாதஸ்வர இசையுடன் கலாச்சார விழா தொடங்குகிறது, அதைத் தொடர்ந்து திருமுறை மற்றும் வேதபாராயணம். இரவில், பட்டிமன்றம், நடனம் – நாடகம், பக்தி மற்றும் நாட்டுப்புற பாடல் கச்சேரிகள் நடைபெறும்.

செய்தி : எஸ்.பிரபு

admin

Recent Posts

மயிலாப்பூர் ஆர்.எச்.ரோட்டின் இருபுறமும் புதிய வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

மயிலாப்பூர் சிவசாமி சாலை மண்டலத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மழைநீர் வடிகால் திட்டப் பணியை முடிக்க மறுபுறம் உள்ள சமஸ்கிருத கல்லூரிக்கு…

1 day ago

பாரதிய வித்யா பவனின் இசை விழா தொடங்கியது. விசாகா ஹரியின் ஹரிகதா நிகழ்ச்சியில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

நவம்பர் மாத இறுதியில், சென்னை கேந்திரா பாரதிய வித்யா பவனின் இசை விழா தொடங்கும் போது டிசம்பர் சீசன் ஆரம்பமாகிறது.…

1 day ago

டிசம்பர் சீசனுக்கு மயிலாப்பூரில் உங்கள் வீட்டில் கூடுதலாக உள்ள அறையை இசை ரசிகர்களுக்கு வாடகைக்கு விட விரும்புகிறீர்களா?

இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளுக்கு புகழ்பெற்ற டிசம்பர் சீசனில் உங்கள் குடியிருப்பில் அல்லது உங்கள் வீட்டில் கூடுதலாக உள்ள அறையை…

1 day ago

ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.

மயிலாப்பூரில் நவம்பர் 20ம் தேதி காலையில் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான முதல் சடங்கு தொடங்கியது. தெருக்கள்…

4 days ago

லூப் ரோட்டின் கடைசியில் மீன் சந்தை மற்றும் கடல் உணவு வளாகத்தை நிறுவ ஜிசிசி திட்டம்

சென்னை மாநகராட்சி மெரினா லூப் சாலையின் தெற்குப் பகுதியில் மீன் சந்தை மற்றும் உணவு விடுதிக்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. இத்திட்டம்…

5 days ago

ஆழ்வார்பேட்டையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்த ஒத்திகை

ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் திங்கள்கிழமை மாதிரி…

5 days ago