சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7 மணிக்கு மாணவர்களின் கச்சேரியுடன் தொடங்கவுள்ளது.

இந்த விழா ஜனவரி 8 தொடங்கி ஜனவரி 11ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் நாதஸ்வரம், இசை கச்சேரி, பரதநாட்டியம், கிராமிய நடனம், சிலம்பம், கோலப்போட்டி, பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், ஹெரிடேஜ் நடைபயணம், சமையல் போட்டி, செஸ் போட்டி, புகைப்பட கண்காட்சி மற்றும் பல நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளது.

போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் கபாலீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு தாயக்கட்டம், பல்லாங்குழி, மயிலாப்பூர் வினாடி வினா போட்டிகள் ஜனவரி 3 மற்றும் 4ம் தேதிகளில் சிறப்பாக லேடி சிவசாமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

விழா நிகழ்ச்சிகள் பற்றிய அட்டவணை விவரங்களை இந்த இணையதளத்தில் www.mylaporefestival.in சென்று தெரிந்து கொள்ளலாம்.

அனைவரும் வரலாம். அனுமதி இலவசம்.

admin

Recent Posts

வாக்காளர் பட்டியலில் உள்ள விவரங்களைப் புதுப்பிக்கவும், திருத்தங்களைச் செய்யவும் சிறப்பு முகாம்கள்.

வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம் இன்று (நவம்பர் 21), ஞாயிற்றுக்கிழமை மற்றும் நவம்பர் 29 ஆகிய தேதிகளில், வாக்குச்சாவடிகளாகச் செயல்பட்ட அனைத்து…

1 day ago

சாஸ்திரி ஹால் எதிரே லஸ் சர்ச் சாலையில் பள்ளம் ஏற்பட்டதால் வாகனப் போக்குவரத்தில் மாற்றம்.

லஸ் சர்ச் சாலையில், ரானடே நூலகம் / சீனிவாச சாஸ்திரி ஹாலுக்கு எதிரே உள்ள ஒரு பகுதி திடீரென சரிந்து…

1 day ago

மயிலாப்பூர் விழா 2027: பட்டதாரிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கான அழைப்பு

'சுந்தரம் பைனான்ஸ் மயிலாப்பூர் விழா' (Sundaram Finance Mylapore Festival) 2027-ஆம் ஆண்டு, ஜனவரி 7 முதல் 10 வரை,…

2 days ago

கார்த்திகை தீபத் திருநாளுக்காக மண் அகல் விளக்குகள் விற்பனை

மயிலாப்பூரின் மாட வீதிகளில், கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு மண் அகல் விளக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு 5 சாதாரண…

3 days ago

குழந்தைகளுக்கான வேடமணிதல் போட்டி (Fancy Dress Competition) – நவம்பர் 28. முன்பதிவு அவசியம்.

சென்னை புரோபஸ் கிளப் (Probus Club of Chennai), குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, நவம்பர் 28, சனிக்கிழமையன்று, ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி…

4 days ago

ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற சூரசம்ஹார நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில், ஞாயிற்றுக்கிழமை இரவு (நவம்பர் 15), ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் வருடாந்திர சூரசம்ஹார விழாவைக் காணவும்…

6 days ago