மயிலாப்பூர் திருவிழாவின் நான்காவது மற்றும் கடைசி நாள், ஜனவரி 8, ஞாயிற்றுக்கிழமை மயிலாப்பூர் வீதிகளில் மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது, மேலும் ஒவ்வொரு நிகழ்வும் பெரிய அளவிலான பார்வையாளர்களை கொண்டிருந்தது.
காலை 7 மணிக்கு நடந்த இரண்டு நடைப்பயணங்கள் பெரிய ஹிட். டாக்டர் சித்ரா மாதவன், ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு வெளியே தொடங்கிய பயணத்தில் (மயிலாப்பூர் கோயில்கள் – நடைப்பயணம்) சுமார் 200 பேர் கலந்து கொணடனர்.
ஷாலினி ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற நடைப்பயணத்தில் (மயிலாப்பூரில் உள்ள கிளாசிக் ஓல்ட் ஹவுஸ்) சுமார் 60க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
லஸ்ஸில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில், காலை 8.30 மணியளவில் நடைபெற்ற போட்டிகளில் செஸ் சதுக்கம் முழுவதும் குழந்தைகள் நிரம்பி காணப்பட்டனர்; மைக்லெஸ் கச்சேரி முடிந்ததும், சதுரங்கப் போட்டியும், கைவினை பயிற்சி பட்டறையும் நடைபெற்றது.
மதியம் 3 மணியளவில், நித்ய அமிர்தம் உணவகத்தின் முதல் தளம் பரபரப்பானது; மதிய உணவு முடிந்தவுடன் சுமார் 3.30 மணியளவில் சமையல் போட்டி நடைபெற்றது. இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இந்த சமையல் போட்டிகளை ஸ்ரீதர் வெங்கடராமன் ஒருங்கிணைத்து நடத்தினார். கருப்பொருள்கள்; சட்னி மற்றும் ரசம்.
மாநில ஆளுநர் மயிலாப்பூர் மாட வீதிகள் வழியாக உள்ளூர் அரங்கில் நடைபெற்ற நடனக் கச்சேரியில் கலந்து கொள்ளச் சென்றதால், கோலம் மற்றும் ரங்கோலி போட்டிகள் தாமதமானது; எனவே கோலப் போட்டிகள் மாலை 3.40 மணிக்குத்தான் தொடங்கியது. ஆனால் ஒரு மணி நேரத்தில் வடக்கு மாட வீதியின் கிழக்கு முனை கோலங்களால் அழகான வடிவமைப்புகளின் கம்பளமாக மாறியது.
லேடி சிவசுவாமி ஐயர் பெண்கள் பள்ளியில் உள்ள மண்டபத்தில், பல்லாங்குழி போட்டியில் 75 பேர் கலந்து கொண்டனர்; பெரியவர்கள் மற்றும் சிறுவர்களுக்கான போட்டிகள் நடந்தன.
மேடை நிகழ்ச்சிகள் மாலை 5.30 மணிக்கு தொடங்கியது மற்றும் ஞாயிற்றுக்கிழமை மாலை, இராணி மேரி கல்லூரி மாணவர்கள் நிகழ்ச்சியில் முதலாவதாக, சிலம்பம் பயிற்சி பெற்ற ஐந்து சிறுமிகள் 1500க்கும் மேற்பட்ட பார்வையாளர்களை தங்கள் அற்புதமான சிலம்பாட்டத்தால் உற்சாகப்படுத்தினர். பின்னர், சுமார் 25க்கும் மேற்பட்ட பெண்கள் இந்திய நாட்டுப்புற நடனங்களின் வண்ணமயமான நடனத்தை வழங்கினர்.
சுப்ரமணியம் தலைமையிலான கே.எஸ்.ஆர் ஆர்கெஸ்ட்ரா குழுவினர் வழங்கிய கிளாசிக்கல் தமிழ் திரைப்படப் பாடல்களின் கச்சேரியுடன் நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறைவடைந்தது.
கடைசி நாள் மாலையில் ஒரு ஏமாற்றம் என்னவென்றால், இந்த பகுதியில் உள்ள ஒரு நடன அரங்கிற்கு மாநில ஆளுநரின் வருகைக்காக இங்குள்ள பாதுகாப்பு விதிமுறைகளின் காரணமாக ஃபுட் ஸ்ட்ரீட் ஸ்டால்கள் மூடப்பட்டன.
கோவில் பகுதிகளில் ஆயிரக் கணக்கான மக்கள் வந்து கண்டு மகிழ்ந்த மாபெரும் திருவிழாவாக இந்த மயிலாப்பூர் திருவிழா அமைந்திருந்தது.
திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளின் 30 சிறிய வீடியோக்களை கீழே உள்ள இணைப்பை கிளிக் செய்து பார்க்கவும். https://www.youtube.com/@mylaporefestival7626
மயிலாப்பூர் திருவிழாவின் அனைத்து நிகழ்வுகளின் புகைப்படங்களையும் கீழ்க்காணும் இணைப்பை கிளிக் செய்து பார்க்கவும். http://mylaporefestival.in/2023/gallery.html
மயிலாப்பூரில் நவம்பர் 20ம் தேதி காலையில் ஸ்ரீ ஆதி கேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்திற்கான முதல் சடங்கு தொடங்கியது. தெருக்கள்…
சென்னை மாநகராட்சி மெரினா லூப் சாலையின் தெற்குப் பகுதியில் மீன் சந்தை மற்றும் உணவு விடுதிக்கான திட்டங்களைக் கொண்டுள்ளது. இத்திட்டம்…
ஆழ்வார்பேட்டை முர்ரேஸ் கேட் சாலையில் உள்ள கார்ப்பரேட் அலுவலகத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் திங்கள்கிழமை மாதிரி…
சித்திரகுளம் வடக்கு வீதி இப்போது சுத்தமாக காட்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சி உள்ளூர் பொறியாளர் தலைமையில் துப்புரவுப் பணி நடந்தது. இது…
ஆர் ஏ புரத்தில் உள்ள ஆந்திர மகிளா சபா வளாகத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் மருத்துவமனையில் இலவச பல் பரிசோதனை…
மயிலாப்பூர் மண்டலத்தில் மழை பெய்யும் போது நின்று உற்று நோக்கும் நல்ல இடங்களில் ஒன்று இப்பகுதியில் உள்ள கோவில் குளங்கள்.…