2022 மெட்ராஸ் தினத்திற்காக இரண்டு நினைவுப் பரிசுகள் வெளியிடப்பட்டன; டி-சர்ட், கட்டுமரம். இப்போது விற்பனையில்

மயிலாப்பூர் டைம்ஸ் 2022 மெட்ராஸ் தினத்தை முன்னிட்டு நகரின் நினைவாக இரண்டு நினைவு பரிசுகளை வெளியிட்டுள்ளது. ஒன்று டி-சர்ட் மற்றொன்று மினியேச்சர் கட்டுமரம்.

டி-சர்ட்.
2022 வடிவமைக்கப்பட்ட டி-சர்ட் ஒரு தனித்துவமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது – கோலம் நிபுணர் காயத்திரி சங்கரநாராயணனால் தயாரிக்கப்பட்டது – ஒரு பாரம்பரிய கோலத்தில் செஸ் போர்டு கேம் இன்செட் செய்யப்பட்டுள்ளது. டி-சர்ட் வெள்ளை நிறத்தில் உள்ளது. அளவுகள் – S, M, L, XL. ரூ.350 – கிடைக்குமிடம் – மயிலாப்பூர் டைம்ஸ் அலுவலகம் (77, சி பி ராமசாமி சாலை., ஆழ்வார்பேட்டை, சென்னை 600018). ஷிப்பிங் கட்டணம் கூடுதலாக உண்டு.

முதல் செட் விற்பனையில் 75 டி-சர்ட் விற்று தீர்ந்து விட்டது. அடுத்த செட் விற்பனை ஆகஸ்ட் .27ல் தொடங்க உள்ளது. நீங்கள் இப்போதே முன்பதிவு செய்யலாம்.

ஆர்டர் செய்ய, சாந்தியுடன் 044- 24982244 / 24671122 என்ற எண்ணில் பேசவும். ஆர்டர் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் ஆன்லைனில் பணம் செலுத்தலாம்.

கட்டுமரம்
முன்னாள் கப்பல் ஊழியர் லங்கேஸ்வரன் வடிவமைத்த, இந்த கட்டுமரத்தின் மாடல், சென்னை கடற்கரையில் மிகவும் பொதுவான மீன்பிடி படகு, தற்போது குறைவாகவே உள்ளது. இது சுமார் 7 அங்குல அகலமும் 7 அங்குல உயரமும் கொண்டது. விலை ரூ.800. கிடைக்குமிடம் – மயிலாப்பூர் டைம்ஸ் அலுவலகம். ஷிப்பிங், பேக்கிங் – ரூ.100 கூடுதல்.

ஆர்டர் செய்ய, மயிலாப்பூர் டைம்ஸ் அலுவலகத்தை (77, சி பி ராமசாமி சாலை., ஆழ்வார்பேட்டை, சென்னை 600018. தொடர்புகொள்ளவும்.

சாந்தியுடன் 044- 24982244 / 24671122 என்ற எண்ணில் பேசவும். ஆர்டர் செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் ஆன்லைனில் பணம் செலுத்தலாம். குறைந்த எண்ணிக்கையில் விற்பனைக்கு உள்ளது.

admin

Recent Posts

நாகேஸ்வர ராவ் பூங்காவிற்குள் பூச்சிகளால் அரிக்கப்பட்டிருந்த சில பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளது.

லஸ் அவென்யூவில் உள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவின் ஒரு பகுதி இப்போது ஒரு வறண்ட மைதானம் போல் காட்சியளிக்கிறது. செவ்வாய்க்கிழமை…

4 days ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

1 week ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

1 week ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

2 weeks ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

4 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago