தடுப்பூசி

இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள்:

  1. வார்டு 122: தேனாம்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், நெ. 40. கே.பி.தாசன் சாலை, தேனாம்பேட்டை.
  2. வார்டு 123: பீம்மன்னப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையம், மல்டி ஸ்பெஷாலிட்டி கிளினிக், நெ. 29, சி.பி.இராமசாமி சாலை, ஆழ்வார்பேட்டை.
  3. வார்டு 125: சாந்தோம் ஆரம்ப சுகாதார நிலையம், நெ. 14A, அப்பு தெரு இரண்டாவது சந்து, மயிலாப்பூர்.
  4. வார்டு 126: ஆர்.ஏ.புரம் ஆரம்ப சுகாதார நிலையம், நெ. 17, ஆர்.கே. நகர், இரண்டாவது மெயின் ரோடு, ஆர்.ஏ.புரம்.

கொரோனா தடுப்பூசி வழங்கும் தனியார் மருத்துவமனை விவரங்கள்: (ரூ.250 செலுத்தி பதிவு செய்து தடுப்பூசியை பெற்று கொள்ளலாம்.)

  1. டாக்டர் அகர்வால் மருத்துவமனை, டி.டி.கே சாலை, ஆழ்வார்பேட்டை
  2. காவேரி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை.
  3. பில்ரோத் மருத்துவமனை, ஆர்.ஏ.புரம்.
  4. அப்போலோ ஸ்பெக்ட்ரா, எம். ஆர்.சி. நகர்.
  5. மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேஷன் ஆர்.ஏ.புரம்.
  6. ஆர்த்தோமெட், அஜந்தா பேருந்து நிலையம் அருகில், ராயப்பேட்டை.
  7. வெங்கடேஸ்வரா மருத்துவமனை, சேமியர்ஸ் ரோடு.
  8. டிரினிட்டி மருத்துவமனை, ஆழ்வார்பேட்டை.
  9. எம்.கே ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, டி.ஜி.எஸ் தினகரன் சாலை (அய்யப்பன் கோவில் அருகில்)
  10. சி.எஸ்.ஐ கல்யாணி மருத்துவமனை, டாக்டர்.ஆர்.கே சாலை.

  • மூத்த குடிமக்கள் உடனடியாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சுகாதார ஊழியர் வேண்டுகோள்

சென்னை மாநகராட்சியின் மூத்த மருத்துவ அதிகாரி ஒருவர், சில இடங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகளில் வசிக்கும் மூத்தகுடிமக்களுக்கு அவர்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளிலேயே ஊழியர்கள் வந்து தடுப்பூசி போட வேண்டுகோள் வந்துள்ளதாகவும் ஆனால் அதுபோன்று தடுப்பூசி வழங்குவதில் சில சிக்கல்கள் உள்ளதாக நம்மிடையே தெரிவித்தார்.

முதலாவதாக தடுப்பூசி வழங்கும் ஊழியர்களின் எண்ணிக்கை மிக குறைவு. இரண்டாவது தடுப்பூசி மருந்தை வெளியில் எடுத்து சென்று போடும்போது அங்கு வெப்பநிலையில் மாறுபாடு இருக்கும். எனவே அறுபது வயதிற்கு மேற்பட்டோரும் மற்றும் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட நோய்வாய்பட்டோரும் மற்றும் வீட்டு வேலை செய்பவர்கள் நேரிடையாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்திற்கு அடையாள அட்டையுடன் வந்து தடுப்பூசியை போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தடுப்பூசி அனைவருக்கும் போடும் வகையில் போதுமான அளவு உள்ளது. மேலும் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் நாற்பத்தைந்து வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.


 

Verified by ExactMetrics