தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்ய அனுமதி : கட்டணத்துடன்.

ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பியப் பூங்காவிற்குள் நடைபயணம் செய்பவர்கள் கட்டணம் செலுத்தி இனி நடக்கலாம். எனவே மயிலாப்பூர்வாசிகள் இப்போது நடைபயணத்திற்குச் செல்ல சிறந்த பசுமையான இடத்தைப் பெற்றிருக்கின்றனர்.

தெற்கு ஆர்.ஏ.புரத்தில் உள்ள தொல்காப்பிய பூங்காவில் (அடையார் பூங்கா) இப்போது கட்டணம் செலுத்தி நடைபயணம் மேற்கொள்ளலாம். இதையும் மற்ற திட்டங்களையும் நிர்வகிக்கும் சென்னை நதிகள் மறுசீரமைப்பு அறக்கட்டளை (சிசிஆர்ஆர்டி) தற்போது டாக்டர் டி ஜி எஸ் தினகரன் சாலையில் உள்ள வாயில்களை (குச்சிப்புடி அகாடமிக்கு அருகில் உள்ளது) திறந்துள்ளது.

காலையிலும் (காலை 6.30 முதல் 8.00 வரை) மாலையிலும் (மாலை 4.30 முதல் மாலை 6.00 வரை) நடைப்பயிற்சி செய்ய அனுமதிக்கப்படுகிறது.

ஒரு நாளைக்கு காலை மற்றும் மாலை நடைபயணம் செய்ய நீங்கள் ரூ.20 செலுத்த வேண்டும். ஒரு மாதம் அல்லது மூன்று மாதங்களுக்கு (ரூ.500/ரூ.1500 கட்டணம்) .

நீங்கள் இங்கு அனுமதி பெறுவதற்கு செய்ய வேண்டியது, ஆன்லைனில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கி (http://www.chennairivers.gov.in/pdf/Application%20Form%20-%20Walking%20-%20Tholkappia%20Poonga%20-%20Registration.pdf) விண்ணப்பபடிவத்தை பணத்துடன் அல்லது டிமாண்ட் டிராஃப்ட் மூலம் சமர்ப்பிக்க வேண்டும், பின்னர் உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு . பூங்காவிற்குள் செல்ல அடையாள அட்டை உங்களுக்கு வழங்கப்படும். பூங்காவின் குறிப்பிட்ட ஒரு பகுதிக்குள் மட்டுமே நடைபயிற்சி செய்பவர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் விதிகளை மீறுபவர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் சிசிஆர்ஆர்டி தெரிவித்துள்ளது.

admin

Recent Posts

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவில் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை

2026 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலின் மூன்று நாள் தெப்பத் திருவிழா பிப்ரவரி 1 முதல் 3 வரை…

53 minutes ago

செயின்ட் பீட்ஸ் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 26ல் நடைபெறுகிறது.

101வது பழைய பீடியன்ஸ் அஸோஸியேஷனின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, ஜனவரி 26 அன்று சாந்தோம், செயின்ட் பீட்ஸ் ஆங்கிலோ-இந்தியன் மேல்நிலைப்…

60 minutes ago

சாய் பாபா கோவில் அருகே பொங்கலுக்கான பானைகள் விற்பனை.

உங்கள் பொங்கல் கொண்டாட்டத்திற்காக அழகாக வடிவமைக்கப்பட்ட மண்பானைகளைத் தேடுகிறீர்களா? அப்படியானால், இங்குள்ள சாய் பாபா கோவில் அருகே வெங்கடேச அக்ரஹாரம்…

1 week ago

சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா. ஜனவரி 8 முதல் 11 வரை.

மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…

2 weeks ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற கார்த்திகை தீப விழாவில் ஏராளமான மக்கள் பங்கேற்றனர்.

மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…

2 months ago

மந்தைவெளியில் ஜனவரி 2026ல் கோலப் போட்டி: இப்போதே பதிவு செய்யுங்கள்

மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…

2 months ago