உங்களது பழைய கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்ட வேண்டுமா? இந்த கலைஞரிடம் கொண்டு செல்லுங்கள்.

சித்திரகுளம் குளத்தையொட்டி உள்ள சிறிய கடையின் மேற்கு பகுதியில் கொலு பொம்மைகளுக்கு வண்ணம் தீட்டி பழமை மாறாமல் அழகுபடுத்துபவர் கலைஞர் எஸ்.பரமசிவன். இந்த சீசனில் நீண்ட நேரம் வேலை செய்கிறார். ஏனென்றால், இந்த நேரத்தில் அவர் தேவையுள்ள ஒரு கலைஞர் – விண்டேஜ் பொம்மைகளை மீண்டும் வண்ணம் தீட்டக்கூடிய சில கலைஞர்களில் இவரும் ஒருவர்.

எனவே, வரும் நவராத்திரி விழாவை முன்னிட்டு, அவரது திறமையை நம்பும் மயிலாப்பூர்வாசிகள், தங்கள் குலதெய்வ பொம்மைகளுடன், இவரது கடைக்கு வருகின்றனர்.

போக்குவரத்து சத்தங்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளின் சத்தங்கள், எவற்றையும் பொருட்படுத்தாமல் அனுபவம் வாய்ந்த, தொழில்ரீதியாக பயிற்சி பெற்ற கலைஞர் பரமசிவன், கையில் இருக்கும் வேலையைச் செய்ய தனது நேரத்தை எடுத்துக்கொள்கிறார். இந்த வேலையில் அவசரம் காட்ட முடியாது என்றும், அதனால் வரும் அனைத்து வேலைகளையும் அவர் ஏற்பதில்லை என்றும் கூறுகிறார்.

பரமசிவன் பல வருடங்களாக பொம்மைகளுக்கு புது உயிர் கொடுத்து வருகிறார். அவர் இந்த தொழிலில் கைதேர்ந்த நிபுணர். இப்போது சந்தைகளில் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொம்மைகள் சராசரி தரம் மற்றும் கலைத் தகுதியில் மோசமானவை என்பதை அவர் ஒப்புக்கொள்கிறார்.

பரமசிவன் ஆண்டு முழுவதும் பிஸியாக இருக்கிறார்.

இந்த சீசனில் பரமசிவனின் மருமகன் முருகேசன் தங்கள் சேவையை விரிவுபடுத்த முடிவு செய்தார். தமிழ்நாட்டில் கடலூர் மற்றும் காஞ்சிபுரம் போன்ற இடங்களில் கைவினைஞர்களால் செய்யப்பட்ட பொம்மைகளை வாங்கி வந்து இவரது கடையில் விற்பனையும் செய்கிறார்.

“நாங்கள் கலைஞர்கள் என்பதால், நன்கு தயாரிக்கப்பட்ட பொம்மைகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து இங்கே கொண்டு வந்து விற்பனை செய்கிறோம்,” என்கிறார் பரமசிவன்.

கடையில் உள்ள அலமாரிகளில் ஒரு வரையறுக்கப்பட்ட வகைகள் காட்சிக்கு மற்றும் விற்பனைக்கு உள்ளன. விலை ரூ.150ல் தொடங்குகிறது. பெரிய பொம்மைகளின் விலை ரூ.7,500 முதல் ரூ.10,000 வரைஉள்ளது.

மயிலாப்பூர் சித்திரகுளம் மேற்கு தெருவில் பரமசிவன் கடை உள்ளது. போன்:9841945161 / 7010727239.

மேலும் இவரது கடையின் வீடியோவை இங்கே பார்க்கவும் – https://www.youtube.com/watch?v=kv-3pYR8n10

admin

Recent Posts

ஆட்டோ ஓட்டுநர்கள், தூய்மை பணியாளர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம். ஆகஸ்ட்.31

ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை ஐடி சிட்டி, ஸ்ரீ ரமணா கண் மையம் மற்றும் ராஜா அண்ணாமலைபுரம் குடியிருப்பாளர்கள் நல…

2 days ago

இலவச கண் பரிசோதனை முகாம். ஜூலை 27

ஜெயா கண் மருத்துவமனை ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கல்யாண நகர் சங்க வளாகத்தில் - எண்.29, டி.எம்.எஸ். சாலை,…

1 month ago

மெட்ராஸ் தினம் 2025: பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டி. பள்ளி மாணவர்களுக்கு

மெட்ராஸ் தினம் 2025 க்கு, மயிலாப்பூர் டைம்ஸ் பள்ளி அணிகளுக்கான வருடாந்திர பவர்பாயிண்ட் புராஜெக்ட் போட்டியை அறிவித்துள்ளது. இந்தப் போட்டியின்…

2 months ago

111வது ஆண்டில் இராணி மேரி கல்லூரி. எளிய, மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள்.

இராணி மேரி கல்லூரி வளாகத்தில் இன்று திங்கட்கிழமை காலை ஒரு எளிமையான விழா நடைபெற்றது. இது இந்த கல்லூரியின் 111…

2 months ago

சங்கீதா உணவகத்தில் ரூ.40க்கு மதிய உணவு

சங்கீதாவின் 40வது ஆண்டு விழா கொண்டாட்டங்களில், நகரம் முழுவதும் உள்ள அதன் உணவகங்கள் இப்போது மாறி மாறி வழங்கும் சிறப்பு…

2 months ago

ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல், புரளி என தெரியவந்துள்ளது

புதன்கிழமை இரவு மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயில் அலுவலகத்திற்கு வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறி அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஒரு புரளி…

2 months ago