செய்திகள்

மந்தைவெளியில் புதிய மதுக்கடைக்கு எதிராக பெண்கள் போராட்டம்

திங்கள்கிழமை, செப்டம்பர் 9, எம்.டி.சி பேருந்து நிலையம் எதிரே உள்ள மந்தைவெளியில் புதிதாக திறக்கப்பட்ட அரசு மதுபான விற்பனைக் கடைக்கு எதிராக சுற்றுவட்டாரப் பெண்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.

இக்கடை கடந்த 3 நாட்களுக்கு முன்பு திறக்கப்பட்ட நிலையில், இதுவரை அடையாள பலகை இல்லை.

இந்த கடையை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பெண்கள் நண்பகலில் திரண்டு வந்து மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக போலீசார் வரவழைக்கப்பட்டு பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

கடையை சுற்றிலும் சில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில், மயிலாப்பூர் மண்டலத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, ஒரே ஒரு கடை மட்டுமே, திருமயிலை ரயில் நிலையத்திற்கு அப்பால் இருந்தது. இங்கு சென்னை மெட்ரோ பணி தொடங்கிய போது அதுவும் நிறுத்தப்பட்டது.

செய்தி, புகைப்படம்: பாஸ்கர் சேஷாத்ரி

admin

Recent Posts

ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோவிலில் ஸ்ரீநிவாசப் பெருமாள் பவித்ரோத்ஸவம் செப்டம்பர் 23 வரை நடைபெறுகிறது.

மயிலாப்பூர் ஸ்ரீ வேதாந்த தேசிகர் கோயிலில் உள்ள ஸ்ரீ ஸ்ரீநிவாசப் பெருமாளின் வருடாந்திர பவித்ரோத்ஸவம் செப்டம்பர் 17 முதல் 23…

9 hours ago

அழகான ஓணம் அலங்காரங்கள்; ஐந்து பேர் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

மயிலாப்பூர் டைம்ஸ் நடத்திய ஓணம் அலங்காரப் போட்டியில் 25க்கும் மேற்பட்ட பதிவுகள் வந்தன. சிறிய, கச்சிதமான பூக்கள் நிறைந்த பூக்கோலம்…

1 day ago

வடக்கு மாட வீதியில் கொலு பொம்மை வியாபாரிகள் கடைகளை திறந்துள்ளனர். இந்த வார இறுதியில் வெரைட்டியான பொம்மைகள் விற்பனைக்கு வரும்.

மயிலாப்பூர் வடக்கு மாட வீதியில் கொலு பொம்மைகள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. பல இப்போது சிறிய ஸ்டால்களாக உள்ளது. பாரம்பரிய…

1 day ago

இலவச கண் பரிசோதனை முகாம். மந்தைவெளிப்பாக்கம். செப்டம்பர் 22

மந்தைவெளிப்பாக்கம் ஜெயா கண் சிகிச்சை மையம், மந்தைவெளிப்பாக்கம் டி.எம்.எஸ் சாலை எண்.29ல் உள்ள தி கல்யாண நகர் அசோசியேஷன் வளாகத்தில்…

2 days ago

கொலு பொம்மைகளை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டுமா? தபால் அலுவலகம் மூலம் நீங்கள் அனுப்பலாம்.

கச்சேரி சாலையில் உள்ள மயிலாப்பூர் தபால் நிலையம் வெளிநாடுகளுக்கு கொலு பொம்மைகளை அனுப்பும் பணியை தொடங்கியுள்ளது. கடந்த வாரம், ஒரு…

3 days ago

மெரினாவில் இந்திய விமானப்படையின் கண்காட்சி. அக்டோபர் 5 மற்றும் 6 தேதிகளில்

இந்திய விமானப்படை அதன் நிறுவன தின விழாவை அக்டோபர் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் கொண்டாடுகிறது. கொண்டாட்டங்களுக்கு முன்னதாக,…

3 days ago