மயிலாப்பூர் ட்ரையோ என்று அழைக்கப்படும் சுரேந்தர்நாத், அமர்நாத் மற்றும் அபர்ணா ஆகிய மூவரும் 2/3 அறைகள் நிறைந்த கொலு அமைப்பதில் பெயர் பெற்றவர்கள் அவர்களின் டிப்ஸ் இதோ.
1. லைட் கலர் ப்ளைன் அல்லது புட்டா பட்டுப் புடவைகளை கொலு படிகளில் உடுத்தலாம். ஆனால் அது போல்ஸ்களின் அழகை பாதிக்கக் கூடாது.
2. சக்ரா அல்லது பெரிய பூ வடிவங்கள் போன்ற சில பல்லு வடிவமைப்புகள் – பழைய புடவைகளிலிருந்து – கொலுவிற்கு விதானமாகப் பயன்படுத்தப்படலாம்.
3. பழைய பட்டு சேலை மற்றும் இரட்டை பக்க பார்டர் கொண்ட வேஷ்டியை கொலு படிக்கு பார்டர்களாக பயன்படுத்தலாம். இது ஒரு பெரிய மற்றும் ரிச் தோற்றத்தை அளிக்கும்.
4. எப்பொழுதும் முடிந்தவரை சிவப்பு, பச்சை மற்றும் மஞ்சள் ஆகியவற்றை பய்னபடுத்த முயற்சி செய்யுங்கள், இது எப்போதும் பாரம்பரியமான மற்றும் மங்களகரமான உணர்வைத் தரும்.
5. பாரம்பரிய கோரை பாயை பின்னணியாகவும் பக்கத்துளிகளாகவும் பயன்படுத்தலாம். இயற்கையான தொடுதலுடன் ஆக்கப்பூர்வமாக / புதுமையாக இருக்கும்.
6. கருப்பொருள் கொலுவுக்கு: பின்னணி காட்சிகள் / படங்கள் மதிப்பு சேர்க்கலாம் – பழைய காலெண்டர்கள், போஸ்டர்கள் போன்றவற்றிலிருந்து காட்சிகளைப் பயன்படுத்தவும்.
7. குளத்தில், கிணற்றில் நீர் இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்க நீல காகிதத்தையும், பனி மற்றும் மேகங்கள் போன்ற தோற்றத்தை உருவாக்க மருதுவமனையில் பயன்படுத்த கூடிய காட்டனை பயன்படுத்தவும்.
8. சில முக்கிய பொம்மைகளை முன்னிலைப்படுத்த, ஸ்டாண்டுகளை உருவாக்கி அவற்றை அங்கே வைக்கவும். வேஸ்ட் பொருட்கள், பல்வேறு அளவுகளில் பெட்டிகள் ஸ்டாண்டுகள் தயாரிக்க பயன்படும்.
கொலு அமைப்பது பற்றிய உங்களின் மூன்று டிப்ஸ்களை பகிர விரும்புகிறீர்களா? அவற்றை எங்களுடன் பகிரலாம்.
மயிலாப்பூரில் வருடந்தோறும் ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும் சுந்தரம் பைனான்ஸின் மயிலாப்பூர் விழா ஜனவரி 8 ம் தேதி காலை 7…
மயிலாப்பூரில் உள்ள ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் வியாழக்கிழமை மாலை (டிசம்பர் 4) கார்த்திகை தீப விழா தொடங்கிய நேரத்தில், லேசான,…
மந்தைவெளி ராஜா தெரு குடியிருப்பாளர்கள் நலச் சங்கம் அதன் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக “ஊடக உலகம்” என்ற கருப்பொருளை…
‘பசுமை பயணம்’ என்ற கருப்பொருளில் நடத்தப்படும் மாரத்தான் சைக்கிள் ஓட்டுதல் முயற்சியின் இறுதி நிகழ்வு நவம்பர் 20, காலை 11.30…
மயிலாப்பூர், பஜார் சாலையில் உள்ள டீக்கடை உரிமையாளர் ஒருவர் தெரு நாயை அடித்துக் கொன்றதற்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ஸ்டேஷன்…
ஆர்.ஏ. புரத்தில் உள்ள துர்காபாய் தேஷ்முக் பொது மருத்துவமனை நவம்பர் 18 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல்…