ஆர்.ஏ.புரத்தில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் புகைப்படக் கண்காட்சி.

sivajai ganesan photo exhibitionநடிகர் சிவாஜி கணேசனின் 97வது பிறந்தநாளை முன்னிட்டு ஆர்.ஏ.புரத்தில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் இன்று அக்டோபர் 1ஆம் தேதி காலை புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று மரியாதை செலுத்தினார். மயிலாப்பூர் எம்.எல்.ஏ மற்றும் சில அமைச்சர்களும் நகர மேயரும் உடன் இருந்தனர்.

சிவாஜியின் மகன்கள் பிரபு, ராம்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

இந்தக் கண்காட்சியில் சிவாஜியின் திரைப்படம், சமூகம் மற்றும் அரசியல் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அடங்கிய புகைப்படங்கள் உள்ளன.

எம்.ஜி.ஆர்.ஜானகி மகளிர் கல்லூரிக்கு எதிரே குறுக்காக அமைந்திருக்கும் மண்டபம், தினமும் பொதுமக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டுள்ளது.

Verified by ExactMetrics