ஒரு சில மின்வாரிய டிரான்ஸ்பார்மர்கள் / மின் விநியோக பெட்டிகள் ஜஸ்டிஸ் சுந்தரம் சாலையில் தரை மட்டத்தில் உள்ளன, இங்கு மிகவும் தாமதமாக நடைபெற்றுவரும் வடிகால் வேலை, மேலும், ஒரு கட்ட மின் வினியோகம் ஆகிய பிரச்சனைகள் இங்குள்ள குடியிருப்புவாசிகளின் வாழ்க்கையை சீர்குலைத்து வருகிறது.
இரண்டு மின் இணைப்பு பெட்டிகள் SWDயின் பாதையில் இருப்பதால், அவை பூமியிலிருந்து உயர்மட்டத்திற்கு உயர்த்தப்பட வேண்டும்.
வார்டு 123 கவுன்சிலரோ அல்லது மயிலாப்பூர் எம்.எல்.ஏ.வோ கடந்த இரண்டு மாதங்களாக உள்ளூர் மின்வாரிய ஊழியர்களிடம் இப்பிரச்னைக்குத் தீர்வு காணச் செய்வதில் எந்த வெற்றியும் பெறவில்லை என்று குடியிருப்பாளர் ஒருவர் கூறினார்.
பெரும்பாலான குடியிருப்பு வளாகங்களில் பல வாரங்களாக ஒரு முனை (single phase) மின்சாரம் மட்டுமே வழங்கப்பட்டுவருகிறது.
லிப்ட் ரு முனை மின்சாரத்தில் வேலை செய்யாது மற்றும் பல மூத்த குடிமக்கள் இங்கு வசிக்கும் நிலையில், வேலை செய்யாத லிப்டை மக்கள் அவசர காலங்களில் பயன்படுத்த முடியாத சூழல் உள்ளது.
மின்சார பிரச்சனைகள் பற்றி நேரடியாக மின் வாரியத்தின் லஸ் அலுவலகத்திலோ அல்லது மின்னகம் செயலியிலோ புகார் அளித்தும், எந்த தீர்வும் இல்லை.
பல நாட்களாக மின்சாரம் இல்லாததால், மேல்நிலைத் நீர் தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சில குடியிருப்பு வாசிகள் வேறு இடங்களுக்கு மாறி வருவதாகவும் கூறுகின்றனர்.
செய்தி: ஸ்ரீதர் வெங்கடராமன்