மயிலாப்பூர் ஸ்ரீ செங்கழுநீர் பிள்ளையார் கோயில் கும்பாபிஷேகம் இன்று நவம்பர் 11 திங்கள்கிழமை காலை நடைபெற்றது.
இதையொட்டி கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இந்த வீதியில் வாகனங்களை அனுமதிக்கவில்லை, இதன் காரணமாக விழா அமைதியான முறையில் சிறப்பாக நடந்தது.
கோவில் அருகே பக்தர்கள் அன்னதானம் செய்தனர்.
இந்த சுற்றுவட்டாரத்தில் கடைகள் அதிகாலையில் திறக்கப்பட்டன.
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி.