ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலுக்குள் ஆலோசனை பெட்டி நிறுவல்.

மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனை பெட்டியை நிறுவியுள்ளது.

மக்கள் தங்கள் அனுபவங்கள்/ ஆலோசனைகள்/ யோசனைகள் / புகார்களை இதன் மூலம் பகிர்ந்து கொள்ளலாம்.

மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு, கோயில் அதிகாரிகள் முன்னிலையில் ஆலோசனை பெட்டியை சனிக்கிழமை திறந்து வைத்தார்.

கோவிலின் அலுவலகத்தை 044 – 24641670 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். பி கே கவேனிதா இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலர் ஆவார்.

செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி

Verified by ExactMetrics