உங்களிடம் உள்ள தேவையில்லாத பிளாஸ்டிக், மின்னணு மற்றும் வேஸ்ட் துணி பொருட்களை சிஐடி காலனியில் கொடுக்கலாம்.வேஸ்ட் சேகரிப்பு முகாம்.

குடியரசு தின நிகழ்வின் ஒரு பகுதியாக, மயிலாப்பூரில் உள்ள சிஐடி காலனி சமூகம், ஜனவரி 26 அன்று சிஐடி காலனியின் 5வது குறுக்குத் தெருவில் உள்ள உள்ளூர் பூங்காவில் வேஸ்ட் சேகரிப்பு முகாமை நடத்துகிறது.

இந்த காலனியில் வசிப்பவர்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் பழைய/கிழிந்த துணிகள், மின்னணு/மின்சாரம் மற்றும் உடைந்த பொருட்கள், பிளாஸ்டிக் மற்றும் மரப் பொருட்கள் போன்றவற்றைக் கொண்டு வந்து இங்கு வைக்கப்பட்டுள்ள பெட்டிகளில் போடலாம்.

இந்த வசதி காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டுமே இருக்கும். மேலும் தொடர்புக்கு 9751755522 என்ற எண்ணை அழைக்கவும்.

Verified by ExactMetrics