லஸ் சர்ச் சாலையில், ரானடே நூலகம் / சீனிவாச சாஸ்திரி ஹாலுக்கு எதிரே உள்ள ஒரு பகுதி திடீரென சரிந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஆர். எச். சாலை (R. H. Road) பகுதியிலிருந்து வரும் இருசக்கர மற்றும் முச்சக்கர வாகனங்கள் இந்தப் பாதையைப் பயன்படுத்த அனுமதி இல்லை.
இவ்வகை வாகனங்கள் பல்லக்குமாண்யம் நகர் (Pallakkumanyam Nagar) வழியாகச் சென்று, நாகேஸ்வர ராவ் பூங்கா பகுதியை அடைந்து, அங்கிருந்து மீண்டும் லஸ் சர்ச் சாலையைச் சென்றடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளன.
எம்.டி.சி (MTC) பேருந்துகளுக்கு இந்தப் பாதையில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, அவை டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன. சம்பவ இடத்தில் உள்ள அதிகாரிகளின் தகவல்படி, சீரமைப்புப் பணிகளை முடிக்க ஒன்று அல்லது இரண்டு நாட்கள் ஆகலாம்.
சாலை சரிந்து பள்ளம் ஏற்பட்ட பகுதி தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி சென்னை மெட்ரோவின் பிரம்மாண்டத் திட்டப்பணிகள் நடைபெறும் இடமாகும்; லஸ் சந்திப்பில் மெட்ரோ ரயில் பாதைகள் ஒன்றையொன்று கடந்து செல்லும் வகையில், இங்கு இரண்டு மெட்ரோ நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
செய்தி: பாஸ்கர் சேஷாத்ரி




