கார்த்திகை தீப திருவிழாவின் போது திருவண்ணாமலை கோவிலில் நடைபெறும் சொக்கப்பனை எரிக்கப்படும் நிகழ்ச்சி பெரும்பாலான மக்களை கவர்ந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை இரவு, ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலிலும், ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலிலும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்வை காண பெருவாரியான மக்கள் கூடினர். சொக்கப்பனை என்பது உலர்ந்த பனை ஓலைகளைக் கொண்டு ஒன்றாக பின்னப்பட்டிருக்கும். இதை கோவிலின் திறந்தவெளியில் வைத்து எரிப்பர். இரண்டு கோயில் மண்டலங்களிலும், கோவில் பூசாரிகள் தீயை எடுத்து, சொக்கப்பனையை எரியூட்டியதை மக்கள் அருகில் நின்று பார்த்தார்கள். இது திருவண்ணாமலையில் உள்ள மகாதீபத்தின் ஒரு பகுதியாக மலையின் மேல் எரியும் மாபெரும் சுடரைப் பிரதிபலிக்கும் அடையாளச் செயலாகும், இந்த நிகழ்வு தென்னிந்தியாவில் தீபத் திருவிழாவின் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, பல தன்னார்வலர்கள் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோயிலின் குளத்தின் அனைத்து படிகளிலும் நூற்றுக்கணக்கான மண் விளக்குகளை வைத்து தீபம் ஏற்றினர். இந்த விளக்குகள் அந்தி நேரத்தில் எரிந்தது மிகவும் அற்புதமாக இருந்தது, மாட வீதிகளில் கடந்து சென்ற அனைவரும் இந்த காட்சியை பார்த்து சென்றனர்.