அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில் தேங்கி இருக்கும் மழையினால் அடித்து வரப்பட்ட கழிவுகள் மற்றும் குப்பைகள்

சீனிவாசபுரத்தை ஒட்டிய கடற்கரையோரம், அடையாறு ஆற்றின் முகத்துவாரத்தில், தாவரங்கள், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் என அனைத்து வகையான கழிவுகளும் நிறைந்துள்ளன.

இந்த குப்பைகள் எப்படி இங்கு வந்தது?

இந்த ஆற்றில் ஒரே இரவில் கரைபுரண்டு ஓடிய வெள்ளத்தில் அடித்துவரப்பட்டவை.

செம்பரம்பாக்கம் அணையின் நீர்மட்டம் உயர்ந்ததால் நேற்று ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டபோது, ஆற்றின் கரையோரங்களிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கழிவுகள் தேங்கின.

இந்த பகுதியில் வசிப்பவர்கள் ஆற்றின் குறுக்கே பெரும் சக்தியுடன் பாய்ந்துவரக்கூடிய தண்ணீரை தடுத்து கடலுக்குள் அனுப்ப வேண்டும் என்றும் அவ்வாறு அனுப்பினால் மட்டுமே கழிவுகளையும் குப்பைகூளங்களையும் கடலில் கலக்காதவாறு செய்ய முடியும் என்று கூறுகின்றனர்.

காணொளி:

Verified by ExactMetrics