மயிலாப்பூர் ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் விடியற்காலை முதல் மக்கள் கூட்டம் அலைமோதியது.
2022 ஆம் ஆண்டு புத்தாண்டை வரவேற்க பிரார்த்தனை செய்ய இங்கு அதிகளவில் மக்கள் வந்தனர். நள்ளிரவுக்கு முன்பே வரிசைகள் நீண்டிருந்தன.
ஜனவரி 1ம் தேதி மதியம் 12.30 மணிக்கு கோயில் மூடப்படும் என்று கோயில் அதிகாரிகள் மயிலாப்பூர் டைம்ஸிடம் கூறியிருந்தனர். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கோவில்கள் அனைத்தும் மக்கள் சாமி தரிசனம் செய்ய வசதியாக புத்தாண்டு தினத்தன்று திறந்திருக்கும் என்று கூறியுள்ளார்.
இருப்பினும், சனிக்கிழமை மதியம் 12.15 மணியளவில், கபாலீஸ்வரர் கோவிலில் இலவச தரிசனம் மற்றும் ரூ.100 பிரிவு இரண்டிலும் வரிசைகள் கிட்டத்தட்ட சனீஸ்வரர் சந்நிதி வரை நீண்டு காணப்பட்டது.