அல்போன்சா மைதானம் என்று பிரபலமாக அழைக்கப்படும் தெற்கு கால்வாய் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் தற்போது சுதந்திரமாக முழு இடத்திலும் விளையாட்டுகளை விளையாடலாம்.
மெரினாவில் பதிவுசெய்யப்பட்ட வியாபாரிகளுக்கு வழங்கப்படவிருந்த 100க்கும் மேற்பட்ட ஏற்கனெவே தயாரிக்கப்பட்ட வியாபாரிகளுக்கான ஸ்டால்களை, சென்னை மாநகராட்சி இளைஞர்கள் கால்பந்து மற்றும் கிரிக்கெட் விளையாட்டுகளை விளையாடும் இந்த அல்போன்சா மைதானத்தில் கிடங்கு போல் சேமித்து வைத்திருந்தது. இந்த விவகாரம் நீண்ட காலமாக நீடித்து வந்தது.
இன்று இந்த ஸ்டால்கள் அகற்றப்பட்டு மயிலாப்பூர் சுடுகாடு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
மயிலாப்பூர் எம்எல்ஏ தா.வேலு கூறுகையில், “கடற்கரையில் சென்னை மாநகராட்சிக்கு தேவைப்படும் வரை இந்த ஸ்டால்களை பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு பரந்த இடம் இங்கு உள்ளது” என்றார்.