மயிலாப்பூரில் உள்ள வெள்ளீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பத்து நாள் திருவிழா இரண்டு ஆண்டு இடைவெளிக்குப் பிறகு, ஜூன் 5-ஆம் தேதி காலை 5.30 மணி முதல் 6.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
ஜூன் 7-ஆம் தேதி காலை 6 மணிக்கு அதிகார நந்தி ஊர்வலம், ஜூன் 9-ஆம் தேதி இரவு 9 மணிக்கு ரிஷப வாகனம், ஜூன் 11-ஆம் தேதி காலை 7 மணிக்கு தேர் ஊர்வலம் நடைபெறவுள்ளது. மேலும் ஜூன் 14-ஆம் தேதி இரவு 8 மணி முதல் 9.30 மணி வரை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உற்சவம் நடைபெறாததால், இந்த முறை பிரம்மாண்டமான கொண்டாட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அனைத்து வாகனங்களுக்கும் மீண்டும் வர்ணம் பூசிவருதாகவும், செவ்வாய்க்கிழமை காலை மயிலாப்பூர் டைம்ஸிடம் கோவில் அறங்காவலர் எஸ் பிரபாகரன் தெரிவித்தார்.
மேலும், தினமும் மாலையில் நகரைச் சேர்ந்த பல்வேறு நாதஸ்வரம் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.
மற்றொரு அறங்காவலர் எஸ்.நாகராஜன், விழாவையொட்டி ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான பிரசாதங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மயிலாப்பூர் செங்குன்ற மகா சபை சார்பில் பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
விடையாற்றி உற்சவம்
ஜூன் 16 ஆம் தேதி தொடங்கும் பத்து நாள் விடையாற்றி உற்சவத்தின் ஒரு பகுதியாக, இளம் கலைஞர்களுக்கு தினமும் காலை 6 மணி முதல் கச்சேரி வழங்க வாய்ப்பு அளிக்கப்படுகிறது. மாலை, 7.30 மணிக்கு துவங்கி, பத்து நாட்களிலும் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
செய்தி: எஸ்.பிரபு.
One thought on “ஸ்ரீ வெள்ளீஸ்வரர் கோவிலில் வருடாந்திர வைகாசி திருவிழா நிகழ்ச்சி விவரங்கள்”
Comments are closed.