கோவிலில் உள்ள சந்நிதிகளை மாற்றுத்திறனாளிகள் அணுகும் வகையில், மதிப்பீட்டிற்குப் பிறகு, தேவையின் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள கோவில்களில் சக்கர நாற்காலிகள் வழங்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கடந்த வாரம் அறிவித்தார்.
ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில், கிழக்கு ராஜகோபுரத்தின் அருகே ஒரு மூலையில் தற்போது இரண்டு பழைய சக்கர நாற்காலிகள் கிடக்கின்றன (புகைப்படத்தில் காணப்படுபவை).
இந்த வசதியை மாற்றுத்திறனாளிகள் அவ்வப்போது பயன்படுத்தி வருவதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ஆனால் கோயில் ஊழியர்கள் முதியவர்களுக்கு இந்த சக்கர நாற்காலிகளை தேவைப்படும் முதியவர்களுக்கு முறையாக வழங்குகிறார்களா அல்லது இந்த வசதி குறித்து முதியவர்கள் அறிந்திருக்கிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நாற்காலிகள் துருப்பிடித்து காணப்படுவதால் அவை வழக்கமான பயன்பாட்டில் இருந்ததாக தெரியவில்லை.
செய்தி: எஸ்.பிரபு