கந்த சஷ்டி உற்சவத்தின் இறுதி நாளான இந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 30) ஸ்ரீ கபாலீஸ்வரர் கோவிலில் ஒரு அதிரடியான நாள்.
காலை, 7.45 மணிக்கு சிங்காரவேலரின் வீதிஉலாவுக்குப் பின், குளத்தின் கிழக்குப் பகுதியில் தீர்த்தவாரி நடைபெறும். சிங்காரவேலர் சந்நிதியில் பகல் 12 மணிக்கு மேல் மகா அபிஷேகமும், கலச அபிஷேகமும் நடைபெறும்.
மாலையில் சிங்காரவேலர் மாட வீதியில் இரவு 7 மணிக்கு ஊர்வலமாக புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு மேல் வடக்கு மாட வீதிக்கு வந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெறும்.
வீர பத்ரர் கோவில்
தியாகராஜபுரம் வீரபத்ரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு முருகப்பெருமான் குதிரை வாகனத்தில் ஊர்வலமாக புறப்படுகிறார், வழியில் முண்டகக்கன்னி அம்மன் கோயிலில் ‘வேல்’ பெற்றுக்கொண்டு வீரபத்ரர் கோயிலுக்கு முன்னால் வந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கும். செவ்வாய்கிழமை மாலை 6.30 மணிக்கு கோயிலுக்குள் பாரம்பரிய முறைப்படி முருகப்பெருமானின் திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.
செய்தி: எஸ்.பிரபு